English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Anent
prep. பற்றி, குறித்து, தொடர்பாக, நோக்கி.
Aneroid
n. நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி, (பெ.) நீர்மம் வழங்காத.
Aneurin, aneurin
நரப்பூட்டச்சத்து, சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
Aneurysm
n. (மரு.) குருதிநாள அழற்சி, இயற்கை மீறிய வீக்கம்.
Anew
adv. மறுபடியும், இன்னொரு வகையாக, புதிதாக.
Anfractuosity
n. சுற்று வளைவு, கோணல்மாணல், சிக்கற்சுற்று மண்டிலம்.
Anfractuous
a. சுற்றி வளைந்த, சிக்கலான.
Angary
n. (சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை, நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Angel
n. தேவதூதர், சம்மனசு, ஆதரவு தரும் தெய்வம், துணையாளி, மென்மையும் தூய்மையும் உடையவர், களங்கமற்றவர், அழகுரு, தூதர், பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Angel-cake
n. முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
Angel-fish
n. சுறா மீன் வகை.
Angelhood
n. திப்பியம், தேவதூதரின் இயல்பு.
Angelic
a. தேவதூதருக்குரிய, தேவதைகளுக்குரிய, தேவதைபோன்ற, திப்பியமான.
Angelolatry
n. தேவதை வழிபாடு, திப்பிய வணக்கமுறை.
Angelology
n. தேவதூதர் பற்றிய கோட்பாடு.
Angelophany
n. மனிதர்முன் தேவதூதர் வௌதப்படத்தோன்றுதல், தேவதை பிரத்தியட்சம்.
Angelus
n. கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல், ரோமன், கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Anger
n. கோபம், கடுஞ்சினம், சீற்றம், எரிச்சல், கடுவெறுப்பு,(வினை) கோபமூட்டு, எரிச்சலுண்டாக்கு.
Angico
n. தென் அமெரிக்கப் பிசின் மரவகை, அம்மரப்பிசின்.
Angina
n. தொண்டை வீக்கம்.