English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Angiocarpous
a. உறையினுள் காயுடைய, சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
AngIo-Israelite
n. அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Angioma
n. குருதிக்கட்டி.
Angiosperm
n. மூடுவிதைச் செடியினம்.
Angle
-1 n. மூலை, வடிவின் புறமுனைப்பு, கூம்பு, சாய்வு, நோக்கின் சாய்வு,(கண்.) கோணம், முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவௌதச் சாய்வளவு, தளச்சாய்வளவு.
Angle
-2 n. தூண்டில், (வினை) தூண்டிவிட்டு மீன் பிடி, வசப்படுத்திப் பிடிரபபதற்காத் தேடித்திரி, கைப்பற்ற நாடு, மருட்டு, பொறியில் பெற முயலு, மாறுபட்ட உள்ளெண்ணத்துடன் செய்தி வௌதயிடு.
Angle,n.pl
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர்.
Angler
n. தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர், மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர்.
Anglewise
adv. கோணமாக உடைய.
Angle-worm
n. தூண்டிற்புழு.
Anglian
n. ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர், 'ஆங்கிள்' மரபினர்,'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி, 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Anglican
n. ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர், கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர், (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Anglicanism
n. ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு, கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை, ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
Anglice
adv. ஆங்கிலத்தில்.
Anglicise
v. ஆங்கில மரபுப்படத்து, ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு, ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை, ஆங்கிலமயமாகு.
Anglicism
n. ஆங்கில மரபு, ஆங்கில மரபு, ஆங்கிலப்பண்பு, ஆங்கில நாட்டுக்குரிய தனிச்சிறப்பு கூறு, ஆங்கிலச்சார்பு ஆங்கில நாட்டுச் சார்பான கோட்பாடு.
Anglist
n. ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
Anglistic
n. ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.