English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Anglo-American
n. ஆங்கிலோ அமெரிக்கர், ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர், (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய, ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Anglo-Catholic
n. ஆங்கிலோ கத்தோலிக்கர், ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர், ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர், குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்,(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Anglo-French
n. ஆங்கிலோ பிரெஞ்சுமொழி, முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி,(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய, ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
Anglo-Indian
n. ஆங்கிலோ இந்தியர், இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர், ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர், (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய, இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த, ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Anglo-Irish
n. அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி, ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள், ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர், (பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய, அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த, ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
Anglomania
n. ஆங்கில வெறியார்வம், ஆங்கில மோகம்.
Anglomanian
n. ஆங்கில வெறியர்.
Anglo-Norman
n. இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி,(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
Anglophil,Anglophile
n. ஆங்கிலப் பண்பார்வலர்,(பெ.) ஆங்கிலப் பண்பார்வமிக்க.
Anglophobe
n. ஆங்கிலச் சார்பு வெறுப்பவர், ஆங்கிலச் சார்பினை அஞ்சுபவர், (பெ.) ஆங்கிலச் சார்பு வெறுக்கிற, ஆங்கிலச் சார்பு அஞ்சுகிற.
Anglophobia
n. ஆங்கிலச் சார்பு வெறுப்பு.
Anglophobiac,Anglophobic
a. ஆங்கிலச் சார்பு பற்றி வெறுப்புடைய.
Anglo-Saxon
n. பழங்கால ஆங்கில மொழி, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் மூதாதையர், ஆங்கில மொழி பேசுபவர், ஆங்கிலஇன மரபினர், (பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த, ஆங்கில மொழி மரபு சார்ந்த.
Anglo-Saxondom
n. ஆங்கில மொழி பேசப்படும் உலகப் பரப்பு.
Anglo-Saxonism
n. ஆங்கிலமொழி மரபின் தனி உரிமைக்கோரிக்கைகள் பற்றிய நம்பிக்கை.
Angola, angora
துருக்கி நாட்டு ஆட்டு வகை, பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை, கம்பளி ஆடை வகை, பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
Angostura
n. காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
Angry
a. கோபமான, சீற்றமுள்ள, கடுஞ் சினங்கொண்ட,கடுவெறுப்புடைய, சீறுகிற.
Angstrom unit
n. ஔத அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
Anguifauna
n. திணைக்குரிய பாம்பினத் தொகுதி.