English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bloom
-2 n. முழுதும் உருவாகா உலோகக்கட்டி, (வினை) முழுதும் உருவாகா உலோகக் கட்டியாக்கு.
Bloomer
n. பெண்டிரணியும் குறும்பாவாடைக் காற்சட்டை.
Bloomers
n. pl. மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
Bloomery
n. கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
Blooming
a. மலர்ச்சியுடைய, சிவந்த, மகிழ்ச்சிவாய்ந்த,.
Blossom
n. பூ, கனிதரும் மலர், பூங்கொத்து, இளமை நலம், நல்லிமை, வனப்புத்தோற்றம், (வினை) அலர், அரும்பவிழ், மலர்விரி, மலர்ச்சியுறு, முழுவிரிவடை, வளம்பொங்கு.
Blossomfaced
a. உப்பிய முகமுடைய.
Blossomless
a. பூவில்லாத, மலர்ச்சியற்ற.
Blossom-nosed
a. விரிந்த மூக்குடைய.
Blossomy
a. மலர் நிறைந்த, பூப்போன்ற.
Blot
-1 n. புள்ளி, கறை, அழுக்கு, குற்றம், குறைபாடு, துடைத்தழிப்பு, இழிசெயல், இழி பண்பு, (வினை) கறைப்படுத்து, அழகுகெடு, துடைத்தழி, மைஓட்டுத்தாளால் ஒற்று, கிறுக்கிவை, பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Blot
-2 n. கட்ட ஆட்டத்தில் இடருக்கு ஆளான காய், ஆட்டத்தில் வலிமை குறைந்த கட்டம், போர்த்திட்டத்தின் வலுக்குறையுடைய பகுதி.
Blotch
n. கொப்புளம், பொக்குளம்ம, கறை, தழும்பு, தடம், பொட்டு, சுட்டி, பட்டை, செடி நோய்வகை, (வினை) கொப்புளத்தால் நிரப்பு, தழும்புகளால் நிரப்பப்பெறு.
Blotched
a. பொட்டுப்பொட்டான, தழும்புதழும்பான.
Blotching n.
அப்புதல், அடைதல்.
Blotchy
a. கொப்புளங்களை உடைய.
Blotted
a. கறைப்படுத்தப்பட்ட, துடைத்தழிக்கப்பட்ட, பொட்டாகச் சிதறப்பட்ட, கிறுக்கி வைக்கப்பட்ட, மைஒற்றப்பட்ட.
Blotter
n. கறைப்படுத்துபவர், அழிப்பவர், மை ஒட்டுத்தாள், மோசமான எழுத்தாளர்.