English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bosh
-2 n. உலைக்கள அடுப்பின்கீழ் சாய்வுப்பகுதி.
Bosk
n. புதர்க்காடு, அடர்ந்த கானகம், தோப்பு, தோட்டம், பண்ணை.
Boskiness
n. அடர்கானத்தன்மை.
Bosky
a. மரங்கள் அடர்ந்த, புதர் நிறைந்த, நிழல் மிகுந்த.
Bosom
n. மார்பு, மார்பக உடை, சட்டையின் முன்புறம், நீர்நிலை மேற்பரப்பு, அணைப்பு, அனைக்கும்,கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு, சுற்றுவரம்பு, உள்ளம், இருதயம், உணர்ச்சியின் இருப்பிடம், மையம், நடுப்பகுதி, உள்ளுணர்ச்சிகள், அக அவாக்கள், மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான, மறைவடக்கமான, நெருங்கிய பழக்கமுள்ள, (வினை) மார்போடு அணை.
Bosomed
a. மார்புடைய, அணைப்புள்ள, அடைக்கப்பட்டுள்ள.
Boss
-1 n. புடைப்பு, முனைப்பு, முகப்பு, உலோகக்குமிழ், குமிழ் போன்ற அணிகலம், (கட்.) கவிகைமாட மையக்குமிழ், (இயந்,) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
Boss
-2 n. பணிமுதல்வர், மேலாண்மை உரிமையாளர், தொழில் முதல்வர், (பெ.) தலைமையான, மிகச்சிறந்த, (வினை) நடத்து, செயலாட்சிசெய், கட்டுப்படுத்து, அடக்கியாள். தலைமையுரிமைகொள், முனைத்திரு.
Bossed
a. மேடாக அமைக்கப்பட்டுள்ள, முனைப்புருவுள்ள.
Bossy
-1 a. குமிழ்களுள்ள.
Bossy
-2 a. செயலாட்சியுள்ள, அடக்கியாளுகின்ற, அதிகாரத்தன்மையுடைய.
Boston
n. இருவர் நடனவகை, சீட்டாட்ட வகை.
Boswell
n. அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர், வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Boswellian
a. பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
Boswellism
n. வீரவழிபாட்டு வாழ்க்கை வரலாறு வரையும் பான்மை.
Boswellize
v. வீரவழிபாட்டியல்போடு வாழ்க்கை வரலாறு எழுது.
Bot
n. ஈ வகையின் புழுப்பருவ உரு,குதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை.
Botanic, botanical
மருந்துப்பூண்டு, (பெ.) தாவரவியலைச் சார்ந்த.
Botanist
n. தாவரவியல் நுல் பயிலும் மாணவர், தாவரவியல் வல்லுநர்.
Botanize
v. செடியினங்களைச் சேகரித்து அவற்றின் வளர்ச்சியை ஆராய்ச்சி செய்.