English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Botany, Botany wool
n. சிறந்த கம்பளி, ஆஸ்திரேலிய கம்பளி மயிர்.
Botargo
n. மீன்வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்சுவைப்பொருள்.
Botch
n. தோல்மேல் தடிப்பு, கரணை, பற்றை, அரைகுறை வேலை,மோசமான வேலைப்பாடு, (வினை) அரைகுறையாகப் பழுதுபார், ஒட்டுப்போட்டுச் சமாளி, மோசமாக வேலைசெய்.
Botcher
n. பழுது பார்ப்பவர், அரைகுறையாகச் செய்பவர்.
Botchery
n. அரைகுறை வேலைப்பாடு.
Botching
n. அரைமகுறை வேலை, (பெ.) அரைகுறையான, ஒட்டுப்பொருத்தான.
Botchy.
a. குற்றங்கள் கொண்ட, குறைபாடுகள் நிறைந்த.
Botfly
n. குதிரை முதலிய விலங்குகள் மீது முட்டையிடும் ஈ வகை.
Both,prom.
இருவரும், இரண்டும், (பெ.) இருவரில் இருவரும் இணைந்த, இரண்டில் இரண்டும் சேர்ந்த, இருசார்புகளும் ஒருங்கு சார்ந்த, (வினையடை) இருவரும் சேர்ந்து, இரண்டும் சேர்த்து, இரு சார்பிலும்.
Bother
n. தொந்தரை, தொல்லை, சிறு துன்பம், இன்னல், (வினை) தொந்தரை எடுத்துக்கொள், தொல்லைக்கொடு, மனக்கவலை உண்டாக்கு.
Botheration
n. நச்சரிப்பு, தொந்தரைச் செயல்.
Bothersome
a. நச்சுப்படுத்துகிற, தொல்லை தருகிற.
Bothie, bothy
குடில், வேய்மனை, ஒரே அறையுள்ள தொழிலாளர் உறைவிடம்.
Bothole
n. ஒட்டுயிர்ப் பூச்சியால் தோலில் இடப்பட்ட துளை.
Bothy-man
n. குடில் வாழ்நன், குடிசைவாழ் பண்ணையாள்.
Bottine
n. உயர் புதையடி, உயர் குதிகால் பகுதியுடைய கால் புதையரணம், அரை புதையடி, பெண்டிர் புதையரணம், சிறு மிதியடி.
Bottle
-1 n. புட்டி, குப்பி, புட்டியிலுள்ள பொருள், சாராயம், குடித்தல், (வினை) புட்டியில் நிரப்பு, குப்பியில் அடை.
Bottle
-2 n. உலந்த புல் கட்டு, வைக்கோல் பொதி.