English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bottom
n. அடி, அடிப்புறம், அடிப்பரப்பு,அடித்தளம், அடிப்படை, மூடு, தூர், ஆதாரம், உடலின் பிட்டம், நாற்காலியில் இருப்பிடம், நீர்நிலைப் படுகை, கலத்தின் அடிக்கட்டு, புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி, மலையின் தாழ்வாரம், ஆற்றடுத்த தாழ்நிலம், கப்பல் அடித்தட்டு, கப்பல், கீழ்ப்புறம், மறுபுறம், இழிபுறம், உட்கடந்த பகுதி, நிலத்தளம், நிலத்தளப்பணி, முக்கிய கூறு, நிலையாற்றல், உறுதியான செல்வளம், பொய்ம்மயிர்த் தொங்கல்,(வினையடை) அடிப்பகுதி சார்ந்த, தாழ்வான, கடைப்பட்ட, கடைசி யான, அடிப்படையான, (வினை) வாத ஆதாரமாக்கு, அடிப்படையாக்கு, நிலைநாட்டு, ஆழங்காண், உளவுகாண், அடி மெய்ம்மை கண்டுபிடி, அடித்தங்கு, அடிப்பகுதி அமை, தூரிடு.
Bottomed
a. தூருடைய, அடிப்பகுதியுள்ள.
Bottom-fish
n. அடிப்பகுதி உணவுண்டு வாழும் மீன், அடித்தள உணவுண்டு வாழும் மீனினம்.
Bottomless
a. அடிப்பகுதியில்லாத, அடித்தளமற்ற, ஆழம்காணமுடியாத.
Bottom-most
a. மிகக் கீழ்ப்பட்ட, மிகக் கடைப்பட்ட, மிக அடிப்பட்ட.
Bottomry
n. கப்பல் பயண இடர் ஏற்று அளிக்கப்படும் பிணையக்கடன ஒப்பந்தம், (வினை)கப்பல் பிணையம் வைத்துக்கடன் பெறு.
Bottom-sawyer
n. இரம்பக் குழியில் கீழிருந்து பணிசெய்யும் வாள் அறுப்புத் தொழிலாளர்.
Botts
n. குதிரை முதலிய விலங்குகளுக்குக் குடற்புழு வகையால் ஏற்படும் நோய்.
Botulism
n. (மரு.)காரச்சுவையுண்டியின் மூலம் ஏற்படும் நச்சுப்பாடு, தகரக்கல உணவினால் நச்சுப்பாடு உண்டாதல்.
Boudoir
n. (பிர.)பெருமாட்டியின் தனி அறை.
Bouffe
n. கேலிக்கூத்து இசைநாடகம்.
Bougainvilia, Bougainvillaea
n. வண்ணச் செதில்களுடைய வெப்பமண்டல மலர்செடிவகை.
Bough
n. கொப்பு, வெட்டிய சிறுகிளை, தூக்குமரம்.
Boughpot
n. பூந்தொட்டி, பூங்கொத்து,
Bought
-1 n. குல், வளைவு, சுருள்.
Bought(2), v. buy
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Bougie
n. (பிர.) மெழுக்குதிரி, மெழுக்குவத்தி, (மரு.) வளையும் இயல்புடைய மென்மையான அறுவைக்கருவி.
Bouillabaisse
n. சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
Bouilli
n. (பிர.) வேகவைத்துத் துவட்டிய ஊணுணவு.