English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brazeless
a. பற்றாசிடப்படாத.
Brazen
a. பித்தளையாற் செய்யப்பட்ட, உறுதியான, மஞ்சள் வண்ணமான, கடுஒலி உடைய, பித்தளை போன்ற, நாணமற்ற, (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில், வெட்கததை ஒழி.
Brazen-face
n. செருக்குமிக்கவர், நாணிலி.
Brazen-faced
a. வீம்புத்தனமான, ஆணவம் நிறைந்த,.
Brazenness, brazenry
நாணம் இல்லாத் துணிவு, நாணம் இல்லாத நடத்தை.
Brazier
-2 n. நெருப்புக்கலம், கனல் தட்டு.
Brazil
n. வண்ணப்பொருள்கள் செய்யப்பயன்படும் தென்அமெரிக்க மரவகை.
Brazilian
n. தென் அமெரிக்காவிலுள்ள பிரசீல் நாட்டைச் சேர்ந்தவர், (பெ.) பிரசீல் நாட்டைச் சார்ந்த.
Brazil-nut
n. உணவுக்குதவும் பிரசீல் நாட்டு மரக்கொட்டை வகை.
Brdadyseism
n. நிலவுலகத்தோட்டின் மெல்லதிர்வு.
Brdeeches-buoy
n. மெய்பொதிந்தியங்கும் உயிர்காப்பு மிதவை.
Breach
n. (கப்.)உடைப்பு, முறிவு, உடைந்த இடம், முறிவுற்றநிலை, அரணில் பிளவு, இடையீடு இடைவௌத, மீறுகை, சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல், கடமை தவறுகை, நட்பு முறிவு, அமைதி குலைவு, ஒரு பொருளின் உடைந்த நிலை, அலைமோதுகை, திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல், (வினை) பிளவுண்டாக்கு, இடைவழி உண்டுபண்ணு, உடைப்பு ஏற்படுத்து, திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Bread
n. ஊதப்பம், புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டி, அப்பம், உணவு, வாழ்க்கைத் தொழில், பிழைப்புச்சாதனம், (பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்த, பிழைப்புக்குரிய, உயர் நோக்கமற்ற, முழுதும் உலகியல் சார்பான, இயற்பொருள் வாதம் சார்ந்த, முதிரா இளமைக்கூறுடைய, உறமற்ற.
Breadberry
n. சூடான பாலிலுறிய அப்பத்துண்டுகள்.
Bread-bone fever
n. குலைக்காய்ச்சல் வகை.
Bread-corn
n. அப்பம் செய்யப் பயன்படும் தானியம்.
Bread-crumb
n. அப்பத்தின் உள்ளீடான பகுதி, சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு, (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
Breadfruit
n. தென்கடல் பகுதியின் மரவகை, ஈ.ரப்பலா மரம்.
Bread-line
n. உணவு பெறநிற்கும் ஏழைகளின் அணி வரிசை.