English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Budget
n. மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல், கோணிப்பை, கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி, நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள், குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை, குடும்ப வரவுசெலவுக்கணக்கு, (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
Budgetary
a. வரவு செலவுத் திட்டத்தைச் சார்ந்த.
Budha
n. அறிவொளி ஊட்டப்பெற்றவர், போதிசத்துவர், கௌதமபுத்தர்.
Budless
a. அருமபற்ற, முளையற்ற, சினை இல்லாத.
Buff
-1 n. எருமைத்தோல், மெத்தென்ற, முரட்டுத்தோல்,படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல், படைத்துறை முரட்டுச் சட்டை, ஆடையற்ற மனித உடல் தோற்றம், மங்கலான மஞ்சள் நிறம், தோல் போர்த்த கைதடி, தோல் போர்த்த சக்கரம், மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர், (மரு.) காய்ச்சல் கொண்ட
Buff
-2 v. அடி, மொத்து, அடித்துக்கிழி.
Buffalo
-1 n. எருமை, எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு, நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
Buffalo
-2 v. தடுமாறச் செய், குழப்பமடையச் செய், அச்சுறுத்தி அடக்கமுனை.
Buffalo-gras
n. (தாவ.) சமவௌதகளில் வளரும் புல் வகை.
Buffalo-nut
n. சந்தனமர இனத்தைச் சார்ந்த எண்ணெய் தரும் கொட்டைகளையுடைய தென் அமெரிக்கக் குத்துச் செடி வகை, எண்ணெய் தரும் கொட்டை வகை.
Buffalo-robe
n. அமெரிக்கக் காட்டெருமைத் தோல் போர்வை, காட்டெருமைத் தோல் மேலாடை.
Buffcoat
n. கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை.
Buffer
-1 n. எருமைத்தோலால் பெருகிடுபவர்.
Buffer
-2 n. அடிதாங்கி, தாக்குதல் தடுக்கும் பொறி, புகை வண்டிப் பெட்டிகளிலும் கப்பலிலும் மோதுவதால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் அமைப்பு, படகோட்டியின்தோழன், மந்த மதியினன், அப்பாவி, பழம் போக்காளன்.
Buffer-state
n. இடைத்தடுக்குநாடு, மனத்தாங்கல் உள்ள இருநாடுகளுக்கு இடையே உள்ள சிறிய நடுநிலை நாடு.
Buffet
எடுத்தூண், மகிழ்ந்தூண், கூட்டூண்
Buffet
-1 n. பக்கப்பலகை, தாழ்நத நீண்டசதுர நாற்கால் மணை, நிலையறைப்பெட்டி, சிற்றுண்டிச்சாலை.
Buffet
-2 n. கையடி, கைக்குத்து, கைத்தட்டு, மோதல், அடி, தாக்குதல், அலைப்பு, அலைக்கழிப்பு, போராட்டம், (வினை) அடி, குத்து, மோது, தாக்கு, போராடு, திருப்பி அடி,முரட்டடி கொடு.
Buffeting
n. கையால் அடித்தல், குத்துச் சண்டை செய்தல், சச்சரவு, அடிமேல் அடி அடித்தல்.
Buffleather
n. மெருகிடப் பயன்படும் எருமைத்தோல்.