English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bufflehead
n. தென்அமெரிக்க நீரிமுழ்கி வாத்துவகை, அறிவிலி.
Buffo
n. விகடன், நகைச்சுவை நடிகன், கேலிக் கூத்தன், (பெ.) நகைக்கத் தக்க, கேலிக்கூத்தான், நகைச் சுவையுடைய.
Buffoon
n. விகடகவி, பரியாசகர், கேலிக்கூத்தர், கீழ்ததர நகைச்சுவை நடிகர், (வினை) கேலிக்கூத்தாடு, விகடம் பண்ணு.
Buff-stick
n. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய கைத்தடி.
Buff-tip
n. விட்டில்பூச்சி வகை.
Buff-wheel
n. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய உருளை.
Bug
n. மூட்டுப்பூச்சி, மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை, அரை வெறியர், புள்ளி, ஆள், (பெ.) அரை வெறி கொண்ட.
Bugaboo
n. அச்சுறுத்தி, பூச்சாண்டி.
Bugbane
n. பூச்சிகளை அண்டவிடாமல் விரட்டும் தன்மை வாய்ந்த செடிவகை.
Bugbear
n. அச்சுறுத்தி, பூச்சாண்டி, (பெ.) அச்சுறுத்துகிற.
Bugger
n. சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர், இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர், விலங்குத்தன முடையவர், கயவன், பேர்வழி, பயல், (வினை) அலைந்துதிரி, கிடந்தலை.
Buggery
n. இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கம்.
Buggy
n. இலேசான சிறு ஒற்றைக்குதிரை வண்டிவகை.
Bughouse
a. பித்துப்பிடித்த.
Bug-hunter
n. பூச்சி சேகரம் செய்பவர், பூச்சியின் ஆராய்ச்சி யாளர்.
Bugle
-1 n. எக்காளம், படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்,வேட்டைக்காரர் ஊதுகொம்பு, வேட்டைக்காரர் கொம்புக் கலம், (வினை) எக்காளம் முழுங்கு, கொம்பு ஊது.
Bugle
-2 n. அழகுக்காக, ஆடைகளில் தைக்கப்படும் நொய்ம்மையான நீண்ட கருமணி வகை.
Bugle(3(
n. (தாவ.) நீல மலர்களைக் கொண்ட படரும் செடி வகை.
Bugle-band
n. எக்காளம் வாசிக்கும் இசைக்குழு.
Bugle-call
n. எக்காள ஒலி, ஊதுகொம்பு முழக்கம்.