English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bummer
-1 n. படை அணிவகுப்பினின்றுந் தப்பியோடிக் கொள்ளை யடித்துச் சுற்றித் திரிபவர், சோம்பேறி, ஊர்சுற்றி.
Bummer
-2 n. இரைபவர், இரைவது, வண்டு.
Bummock
n. ஆர்க்னித்தீவுக்குழுவில் விழா விருந்திற்குத் தேறல் வடித்தல்.
Bump
n. வீக்கம், புடைப்பு, ஊமையடி, மொத்தல், மோதல், திடீர்க்குலுக்கம், வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல், பந்தின் வேக எதிருந்தல், மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல், படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண், மூளைப்புடைப்பு, அறிவாற்றல், (வினை) முட்டு, தட்டு, மொத்து, தாக்கு, மோது, மோதித்தள்ளு, வீசி எறி, காயம் உண்டுபண்ணு, வீக்கம் தோற்றுவி, விலகு, புடைத்தெழு, மோதப்பெறு, கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை, திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு, பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு, பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு,. தடாலென்ற ஒலி எழுப்பு, வெட்டிவெட்டிச்செல், முட்டி, எழு பாய்ந்தெழு, எகிறு, முன்பட தட்டி மேற்செல், அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு, (வினையடை) திடீரென்று, தடாலென்று.
Bumper
n. மோதுபவர், மோதும் பொருள், உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி, புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு, படகுப் பந்தயம், நிறைந்து ததும்பும் கிண்ணம், பொங்குலம், மிகுவிளைவு, பொங்கு வளம், மக்கட்பொங்கு மாதிரள், சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு, (பெ.) நிறைந்து வழிகின்ற, (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Bumpiness
n. வெட்டிவெட்டியிழுக்கும் இயல்பு, ஆட்டியலைகும் தன்மை.
Bumpkin
-1 n. கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம், படகுகளின் பின்புறத்தில் வௌதப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
Bumpkin
-2 n. நாட்டான், பாங்கறியாதவன், கோணங்கி.
Bumpkinish
a. பாங்கறியா நாட்டுப்புறப்பண்புடைய.
Bumptious
a. வெறுப்பான அளவிற்குத் தன்முனைப்புமிக்க.
Bumptiously
adv. அகப்பாவத்துடன்.
Bumptiousness
n. வெறுப்பான அளவிற்கு முந்துறும் பண்பு, தன்னாணவப்போக்கு.
Bun
-1 n. அப்பவகை, சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை, குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
Bun
-2 n. உலர்காம்பு, முயல்-மான் ஆகியவற்றின் குறுவால்.
Bun
-3 n. அணில்-குழிமுயல் குறித்த குழந்தை வழக்கு.
Buna
n. செய்முறைக்தொய்வகம், செயற்கை இரப்பர் வகை.
Bunch
n. கொத்து, குலை, தொகுதி, கும்பு, குவியல், முடிச்சு, வீக்கம், மொத்தம், திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு, புடை, ஒன்றாக சேர், கொத்தாக இணை, அடர்த்தியாக்கு, ஆடை மடித்துக் கொசுவம் வை, நெருங்கு, (படை.) நேரிய இடை வௌதயின்றி நெருக்கு.
Bunched
a. கொத்தான, புடைத்த, கனலான, முன்துருத்தியுள்ள, உந்தலான.
Bunchiness
n. புடைப்பு, தொகுதி, கொத்துத்தன்மை.