English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bunyip
n. ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை, ஏமாற்றுபவர், மோசடிக்காரர்.
Buoy
n. மிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு.
Buoyage
n. மிதவை அமைப்பு, மிதவை ஏற்பாடு, மிதவை வரிசை.
Buoyance, buoyancy
நீரில் மிதக்கும் பண்பு, மிதப்பாற்றல், மிதக்கச் செய்யும் திறம், காற்றில் எழும் திறம், பளுவின்மை, நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு, கிளர்ச்சி மன எழுச்சி.
Buoyant
a. மிதக்கிற, மிதக்கும் ஆற்றலுள்ள, நொய்ம்மையான, மகிழ்ச்சி மிக்க, நீட்டிப்பாற்றலுள்ள.
Bur
-1 n. உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு, ஒட்டுமுள்விதையுறை, ஒட்டுமுள்மலர், பூச்சி முள், ஒட்டுச்சளி, விடாது ஒட்டிக்கொள்பவர், விடாது ஒட்டி வாழ்பவர், விடாக்கண்டர், விடாக்கட்டை, மரத்தின் கரணை, மான் கொம்பின் அடித்திரடு, நுல் சரடு, கழிவு
Bur
-2 n. ரகர ஒலி, வருடொலி, கரகரத்த ஒலி, (வினை) கரகரவெனும் ஒலி எழுப்பு.
Burberry
n. நீர்தோயா மேற்சட்டை, 'பர்பெரி' கம்பெனியார் செய்யும் ஒருவகை மேற்சட்டை.
Burble
-1 n. சிக்கல், குழப்பம், (வினை) குழப்பமாக்கு, தாறுமாறுக்கு.
Burble
-2 n. முணுமுணுப்பு, (வினை) முணுமுணு, குமிழியிடு, கடகடென்ற ஒலி எழுப்பு.
Burble
-3 v. பொங்கும் களி கிளர்ச்சியுடன் நகையாடு, கடுஞ்சினத்தால் கொதித்தெழு.
Burbot
n. விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Burdash
n. குஞ்ச அருகுடைய முற்கால ஆடவர் அரைக்கச்சை வகை.
Burden
-1 n. பாரம், சுமை, பளு, கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு, பொறுப்பு, கடமை, கடப்பாடு, மேற்கொண்டு தீரவேண்டிய செலவு, விலலங்கம், (வி.வி) தெய்வமொழி, துன்பு செறி ஊழ், துயரம், இடுக்கண், பல்லவி, இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி, முக்கிய செ
Burden
-2 n. தீர்த்த யாத்திரியின் கைத்தடி.
Burdenous
a. பாரமான, தாங்கற்கரிய.
Burdens
n. pl. படகிலுள்ளநிலத்தளப் பலகைகள்.
Burdensome
a. பாரமான, பளுவால் அழுத்துகிற, தாங்கு தற்கியலாத, வருந்துகிற, சோர்வு ஊட்டுகிற.
Burdensomeness
n. இடைஞ்சற்பாடு, களைப்பூட்டும் தன்மை.
Burdock
n. (தா.வ.) கொக்கி போன்ற புல்லியும் தறித்த வால் போன்ற இலையும் உடைய அமெரிக்கப் புல்வகை.