English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Barrelage
n. மிடாவினால் அளந்த அளவு, மிடா எண்ணளவு.
Barrel-bulk
n. மிடா அளவு, ஐந்து கன அடி அளவை.
Barrelful
n. பீப்பாய் அளவு, மிடா கொள்ளக்கூடிய அளவு.
Barrelled
a. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய.
Barren
n. தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான.
Barrenness
n. மலடு, தரிசுநிலை.
Barret
n. தட்டைத் தொப்பி.
Barricade
n. வழியடைப்பு, தெருமறிப்பு, தடை அரண், (வினை) வழியை அடைத்துத் தடைசெய், தடை அரணைக் கொண்டு காப்பு அளி.
Barrier
n. தடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை.
Barrier-reef
n. கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு.
Barriers
n. pl. வேலி, அடைப்பு, போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண், பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை.
Barring
prep. தவிர, விடுத்து, தவிர்த்து, நீங்கலாக, இல்லாமல்.
Barring-out
n. உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
Barrister, barrister-at-law
n. மாவழக்கறிஞர், மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர், உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
Barristerial
a. மாவழக்கறிஞருக்குரிய.
Barristership
n. மாவழக்றிஞருக்கு நிலை.
Barron
n. பண்ணைநில ஆட்சிக் கோமான், குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன், பெருந்தொழில் முதல்வர், அரசமன்ற நடுவரின் பழம் பட்டம், பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம், பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
Bar-room
n. இன்தேறல் வகைகளுள்ள அறை, இன்தேறல் குழாயுள்ள அறை.
Barrow
-1 n. குன்று, புதைமேடு, மண்குவியில், கல்லறை.
Barrow
-3 n. குழந்தைகளுக்கான கையற்ற நீண்ட கம்பளிச்சட்டை.