English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bascule
n. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
Base
-1 n. அடி, அடிப்பகுதி, அடிவாரம், ஆதாரம், கடைக்கால், அடித்தளம், நிலத்தளம், கேடயத்தின் நிலவரை, அடிப்படை, மூலம், மூலமுதல், (க-க) தூணின் அடிக்கட்டு, படைத்துறையின் மூலதளம், கடற்படைத் தலைமையிடம், நில அளவையின் பொது மூலவரை, கலவையின் தலைக்கூறு, மருந்தின் மூலக்கூறு
Base
-2 a. தாழ்ந்த, கீழான, இழிவான,கயமைத்தனமுடைய, ஒழுக்கங்கெட்ட, குறுகிய தன்னலமுடைய, அற்பத்தனமான, கீழ்நிலைப்பட்ட, அற்பவிலையுடைய, பயனற்ற, போலியான, பெறுக்கத்தகுந்த, அடிமையூழியம் செய்கிற,(சட்.) அடிமைப்பட்ட, மாவழகக்க்கறறிறிஞார்ர்(மொழி) உயர்தனிச் செம்மொழியாயிராத.
Baseball
n. தளக்கட்டுப் பந்தாட்டம், பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு, தளக்கட்டாத்துக்குரிய பந்து.
Baseballer
n..தளக்கட்டுப் பந்தாட்டக்காரர்.
Base-born
a. கீழ்ப்பிறப்பான, கீழ்நிலையுடைய, முறை கேடாகப் பிறந்த
Base-court
n. மாளிகை அரணின் வௌதமுற்றம், கீழ்நீதிமன்றம்.
Baseless
n. அடிப்படையற்ற, ஆதாரமற்ற, காரணமில்லாத.
Base-line
n. நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை, வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு, தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
Basely
adv. இழிவாக, அற்பத்தனமாக.
Baseman
n. தளப்பந்தாட்டக்காரர், தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
Basement
n. அடிப்படை ஆதாரம், கட்டிடத்தின் அடித்தளம், நில அறை, கீழ் அறை.
Baseminded
a. சிறுமனமுடைய.
Basenji
n. மிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை.
Base-runner
n. தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களைச் சுற்றிவரும் ஆட்டக்காரர்.
Bash
n. நல்ல அடி, தல்லுகை, அடித்துரைத்தல், (வினை) ஆழ் தழும்புற அடி, உள்ளழுந்த அடி.
Bashful
a. நாணமுள்ள, கூச்சமுடைய, குழப்பமடைந்த, எளிதில் குழப்பமடைகிற, தன்னம்பிக்கையற்ற.
Bashfully
adv. வெட்கத்துடன், நாணிக்கோணி.
Bashfulness
n. வெட்கம், நாணம், நாணிக்கோணுதல்,