English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bashi-bazouk
n. (துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர், கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Bashibazoukery
n. (துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில், கொடுங்கொள்ளை.
Basic
a. அடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Basicity
n. (வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
Basidial
a. சிதல் நெற்றுக்குரிய, சிதல் நெற்றுடைய.
Basidiospore
n. (தாவ) காளான் வகையின் சிதல் நெற்றிலுள்ள சிதல் விதை.
Basidium
n. காளான் வகையின் சிதல் நெற்று, சிதல் விதைகளை வெடிக்க வைக்கும் காளான் உறுப்பு.
Basifixed
a. அடி ஒட்டிய, அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
Basifugal
a. அடி அகல்வான, அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
Basil
-1 n. துளசியினம் சார்ந்த நறுமவ்ச் செடிவகை.
Basil
-2 n. முழுதும் பதனிடப்படாத ஆட்டுத்தோல்.
Basil
-3 n. மணியின் பட்டையிட்ட சாய்கோணப் பக்கம்.
Basilc
n. குருதி நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிற.
Basilica
a. அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம், நெடுமாடக்கோயில், பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று, பண்டைக்கால அரசுமனை.
Basilical
a. அரசுக்குரிய.
Basilican
a. பிறை நெடுமாடத்துக்குரிய, அரசுமனைக்குரிய.
Basilicon, basilicum
உயர்மருந்துக் களிம்பு.
Basin
n. தட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Basinet
n. இலேசான உருள் கவிவுடைய எஃகு தலைச்சீரா.