English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Basinful
n. கிண்ணம் கொள்ளும் அளவு.
Basipetal
a. (தாவ.) இதழ்கள்வகையில் அடிநோக்கி வளர்கிற.
Basis
n. அடிப்படை, மூலமுதல், அடிநிலை, பீடம், மூலச்சரக்கு, மூலக்கொள்கை, தொடக்கத் தத்துவம், உடன் பேச்சுக்குரிய பொது மூலம், பதைத்தளம்.
Bask
v. குளிர்காய், வெயிலிற் காய், ஔதயில் திளை, சார்ந்து இன்பந்திளை.
Basket
n. கூடை, கூடைகொள்ளும் அளவு. பெட்டி, கூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலை, அஞ்சல் வண்டியின் பின்புற வௌதயிருக்கை, பிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடி, கூடை வடிவ அமைப்பு, (வினை) கூடையில் வை, கழிவுக் கூடையில் போடு.
Basket-ball
n. கூடைப்பந்தாட்டம்.
Basket-chair
n. பிரம்பு நாற்காலி.
Basketful
n. கூடை நிரம்பக்கொள்ளும் அளவு.
Basket-making
n. கூடை முடைதல்.
Basket-marker
n. கூடை முடைபவர்.
Basketry
n. கூடை முடைதல், பிரம்புபிண்ணிய வேலைப்பாடு.
Basket-work
n. பிரம்பு முதலியவற்றின் பின்னல் வேலைப்பாடு.
Bason
-2 n. தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை, (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
Basque
n. இடுப்பின் கீழ்தாய நச்சு நீட்டம்.
Basqued
a. கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.
Basquine
n. பாஸ்கு ஸ்பெயின் நாட்டுப் பெண்டிர் கச்சின் மீதணியும் புறச்சட்டை.
Basqye
n. பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர், மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய, பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Bas-relier
n. குவி ஓவியம், பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
Bass
n. இங்கிலாந்தில் செய்யப்படும் மாத்தேறல் வகை, தோப்பி வகை.
Bass
-1 n. கடல்மீன் இனங்களின் வகை.