English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bastardy
n. தகாவழிப்பிறப்பு, முறைகேடனாயிருபக்கும் நிலை, ஒழுக்கக்கேடு, போலித்தனம்.
Baste
-1 v. தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு, தளர்த்தியாய் இழைபோட்டு.
Baste
-2 v. சூட்டிறைச்சி தீய்ந்துபோகா வண்ணம் நெய் வார், மெழுகுத் திரிக்கான துணியின்மேல் உருக்கிய மெழுகு ஊற்று.
Baste
-3 v. தடியாலடி, புடை, சிதை.
Bastille, bastulle
அரண், 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம், கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
Bastimal name
பெயரீட்டு விழாவில் இட்டு வழங்கிய பெயர், குடிப்பெயருக்கு முன்னிட்டு வழங்கும் கிறித்தவ சமயச் சார்பான பெயர்.
Bastinade, bastinado
உள்ளங்காலில் பிரம்பாலடித்தல், (வினை) உள்ளங்காலில் பிரம்பாலடித்து ஒறு.
Bastinadoes, n. bastinado
என்பதன் பன்மை.
Bastion
n. கோட்டை அரணில் முனைப்பான முப்புடைய பகுதி, கோட்டைக் காவல், அரண், காப்பு.
Bastioned
a. அரண் அமைந்த.
Bat
-2 n. பந்தடிக்கும் கோல், மரப்பந்தட்டக்காரர், கோமாளியிடமிருக்கும் தட்டுப்பலகை, செங்கல்துண்டு, (வினை) மரப்பந்தாட்டத்தில் மட்டையாலடி, மட்டை வீசு.
Bat
-3 v. கண் இமை, இமையாடு.
Batata
n. சீனிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குவகை.
Batavian
n. நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர், தற்கால ஆலந்தில் வாழ்பவர், ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர், (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய, தற்கால ஆலந்துக்கு உரிய, ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
Batch
n. அப்பங்களின் ஒரு வேக்காட்டளவு, ஒர் ஈடு, தொகுதி, அடுக்கு, கும்பு, (வினை) தொகுதிகளாகத் திரட்டு, கும்புகளாகப் பிரி.
Bate
-1 n. தோலை மென்பதமாக்குதற்கான காரக்கரைசல், (வினை) தோலைக் காரக்கரைசலில் ஊறவை.
Bate
-2 v. அடக்கு, இழ, தளரவிடு, தணி, குறை, வீழ்ச்சியுறு, கழி, தள்ளு, மழுக்கு.
Bateau
n. பரிசல், இலேசான ஆற்றுப்படகு.