English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chieftain
n. தலைமகன், குலமரபுத் தலைவர், பழங்குடித் தலைவர், மக்கள் தலைவர், படைவீரர் தலைவர், தளபதி.
Chieftaincy
n. தலைமகனாட்சி, குடிமரபுத் தலைவர் நிலை, தலைமகனாட்சி எல்லை.
Chieftainess
n. குலமரபுத் தலைவி, பெண் தலைவர், தலைவி.
Chieftainship
n. தலைமகன் நிலை, தலைமை, தலைமைப்பதவி.
Chieronomic
a. அவிநயக் கலைக்குரிய, கைச்சாடை சார்ந்த, ஊமைக்கூத்துக்குரிய.
Chiff-chaff
n. பாடும் சிறு பறவை வகை.
Chiffon
n. (பிர.) ஆடையோர வேலைப்பாட்டில் பயன்படுத்தப்படும் வலையாடை வகை.
Chiffonier
n. சிங்கார நிலைப் பெட்டி, வண்ணவேலை அடுக்கு மேடை.
Chiffons
n. pl. (பிர.) சிறு சிங்காரிப்புக்கள், ஒப்பனைமினுக்குகள்.
Chignon
n. தொங்கல் முடிக்கற்றை, வார்முடி, பின்னல்முடி.
Chigoe, chigre
தோல்துளைத்து நோயுண்டாக்கும் வெப்பமண்டல ஈ வகை.
Chihuahua
n. அஸ்டக் என்ற பண்டைச் செவ்விந்திய இனத்தவரால் தெய்விகமாகக் கருதப்பட்ட குறுங்கண் பெருஞ்செவி வாய்ந்த சிறுநாய் வகை.
Chikara
n. (இ.) நான்கு கொம்புகள் வாய்ந்த மான் வகை.
Chikara
n. (இ.) நரப்பிசைக் கருவி வகை.
Chilblain
n. கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம்.
Child
n. குழந்தை, சிறுவன், சிறுமி, மகவு, மகன், மகள், கான்முளை, மரபில் வந்தவர், பின்னார், மரபினர், மாணவர், உயர்குடி இளவல், ஏந்தல், ஆக்க உரு, விளைவுருவானவர்.
Child-bearing
n. குழந்தைப்பேறு, குழந்தைகளைப் பெறுதல், (பெ.) குழந்தைகளைப் பெறுவதற்குரிய.
Childbed
n. பேறுகால நிலை, பிள்ளைப் பேற்று நிலை.
Child-birth
n. பிள்ளைப்பேறு, குழந்தைப் பெறுதல்.
Childermas
n. டிசம்பர் 2க்ஷ்-ஆம் நாளில் நடைபெறும் புனிதக் குழந்தைகள் விழா.