English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chilled
a. கடுங்குளிரால் தாக்கப்பட்ட, தணுப்பாக்கப்பட்ட, இரும்பு வகையில் குளிரால் கடினமான, மாட்டிறைச்சி முதலியவற்றின் வகையில் குளிர்பதனப்படுத்தப்பட்ட, ஆர்வம் கொடுக்கப்பெற்ற, உணர்ச்சி அழிக்கப்பெற்ற.
ChillI
n. மிளகாய், மிளகாய் வற்றல்.
Chilliness
n. கடுங்குளிர் நிலை, தணுப்பு.
Chilling
a. கடுங்குளிர் ஊட்டுகிற, ஆர்வங்கெடுக்கிற, வெறுப்பூட்டுகிற.
Chillum
n. (இ.) புகைக்குழாய் அலகு, புகைக்குழாய், புகைக்குழாய் வழி புகைக்குடித்தல்.
Chilly
a. கடுங்குளிரான, குளிர்ச்சியூட்டுகிற, குளிருக்கு ஆற்றாத.
Chilognatha
n. pl. ஆயிரங்கால் அட்டைகள், மரவட்டைகள்.
Chilopoda
n. pl. பூரான்கள்.
Chiltern Hundres
n. pl. இங்கிலாந்தில் முடியரசுத் தனிமானியப் பகுதி நிலக்கூறு.
Chime
-1 n. ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி, அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி, கலகலவென்ற ஓசை, ஒத்திசைப்பு, கூட்டிசைப்பு, செவ்வொலி, பண்ணிசைப்பு, சந்தம்பட்ட ஓசை, உரைப்பாட்டு, ஒத்திசைவு, செவ்விசைவு, ஒலியியைபு, எதுகை, வண்ணம், (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு, ஒத்திசை,
Chime
-2 n. மிடாவின் வாயலகு, (கப்.) தளத்தில் நீர் செல்வதற்குரிய சாய்வான அடித்தளமுடைய வடிகால்.
Chimera
n. பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வௌளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை, கதம்பப் புனைவுருவான விலங்கு, கலப்படப்புனைவு, பொருந்தாக் கற்பனை, கட்டற்ற கற்பனை, கதம்ப உரு, கதம்ப விலங்குச் சித்திரம், சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம், இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Chimere
n. கிறித்தவ மாவட்ட முதல்வரின் கைப்பகுதியற்ற மேலுடுப்பு.
Chimeric
a. கதம்ப விலங்குருச் சார்ந்த, வெறும்புனைவான, மெய்யல்லாத, கட்டற்ற புனைவியலான, நம்ப முடியாத.
Chimerical
a. பெருந்தாப்புனைவான, கட்டற்ற கற்பனாகாரமான, கதம்ப உருவான, நம்ப முடியாத.
Chimney
n. புகைப்போக்கி, மோட்டின் மேலுள்ள புகைப்போக்கியின் கம்பம், விளக்கின் ஆவி செல்குழாய், மேற்கூடு.
Chimney-board
n. அடுப்பங்கரைத் தட்டி.
Chimney-corner
n. அடுப்பங்கரையடுத்த கதகதப்பான இருக்கை, வெதுவெதுப்பான மூலை.
Chimney-jack
n. காற்றோட்டத்துக்கான புகைப்போக்கியின் சுழல் முகடு.
Chimney-piece
n. அடுப்படி மாடத்தட்டு.