English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
China-ware
n. மங்குக்கலத் தொகுதி, பீங்கான் கலங்கள்.
Chinch
n. அமெரிக்க மூட்டைப்பூச்சி வகை.
Chinchilla
n. மென்மயிர்தோலுடைய எலிபோன்ற தென் அமெரிக்கக் கொறிக்கும் இன விலங்கு வகை, கொறிக்கும் இன விலங்கு வகையின் மென்மயிர்த்தோல்.
Chin-chin
n. வரவேற்பு வணக்கமுறை, விடைபெறு வணக்கமுறை, (வி.) வரவேற்பு முகமனாற்று, விடையனுப்பு வணக்கமுறை நிகழ்த்து.
Chinchonaceous
a. காய்ச்சல் மருந்துப் பொடிதரும் பட்டைக்கு உரிய மரத்தினைச் சார்ந்த.
Chincough
n. கக்குவான இருமல்.
Chine
-1 n. தண்டெலும்பு, முதுகெலும்புக்கணு, முதுகெலும்புக்கண்ட இறைச்சி, வாள்போன்ற மலை முகட்டு வரை, ஏறு சரிவான கூர்ம்பாறை, (வி.) முதுகை முறி.
Chine
-2 n. நெடுவிடர், ஆழ்ந்திடுங்கிய பள்ளத்தாக்கு.
Chine
-3 a. ஆடையிற் பன்னிறப்படிவம் பயிற்றிய, ஊடிழையில் உருப்படிவம் படிவிக்கப்பட்ட.
Chinese
n. சீன நாட்டவர், சீன மொழி, (பெ.) சீனநாட்டுக்குரிய, சீனமக்களுக்குரிய, சீனமொழிக்குரிய.
Chink
-1 n. ஓட்டை, பிளவு, புடை, புழை, துளை.
Chink
-2 n. கணகண ஒலி, நாணய ஒலி, (வி.) கணகண ஓசை செய், நாணயத்தைக் கணீரென்று ஒலிக்க வை.
Chink
-3 n. மூச்சு வாங்கமுடியாத எய்ப்பு நிலை, திணறல்.
Chinook
n. ஆங்கிலம்-பிரஞ்சு-அமெரிக்கப் பழங்குடி மொழிகள் முதலிய பன்மொழி கலந்த வணிகர் பேச்சுவகை.
Chinook
-2 n. வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
Chinovnik
n. ருசிய அரசியலின் உயர் அதிகாரி, ஆட்சிக்குழுவினர், அதிகாரவர்க்கத்தார்.
Chintz
n. சீட்டித்துணி, பல்வண்ண அச்சுத்துணி, (பெ.) அச்சடித்த, அச்சுத்துணியாலான.
Chiondoxa
n. விடியற்காலத்தில் அலரும் நீலமலர்ச் செடிவகை.
Chip
-1 n. மரத்தின் துண்டு, துணுக்கு, கட்டையின் சுள்ளி, வரிச்சல், சிம்பு, சிராய், சில்லு, கல்லின் சிறுதுண்டு, காய்கறியின் சிறுநறுக்கு, பூழி, அரிதல், துண்டித்தல், பரப்பின் வடு, தழும்பு, பொன்காசு, பளன், (வி.) மரத்தைக் குறுக வெட்டு, கல்லை ஓரமாகக் கொத்து, சிறு கல்
Chip
-2 n. மற்போர்ப் பொறி முறை வகை, (வி.) மற்போர்ப் பொறிமுறை வகையைக் கையாளு.