English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chip-basket
n. வரிச்சல் கூடை, பழக்கூடை.
Chipboard
n. ஒட்டுமரக்கட்டை, மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை, கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள்.
Chip-carving
n. இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்குவேலை, கொத்துச் செதுக்குப் பணி.
Chip-hat
n. பனை ஓலை நறுக்குகளால் இயற்றப்பட்ட தலைக்கவிகை, ஓலைத்தொப்பி.
Chipmuck, chipmunk
வடஅமெரிக்க அணில் வகை.
Chippendale
n. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர், சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை, புத்தக மேலட்டைப் பாணி வகை, (பெ.) சிப்பெண்டேலுக்குரிய, சிப்பெண்டேலின் பாணியுடைய, உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த.
Chipping
n. கொத்துதல், (பெ.) கொத்துகிற.
Chippy
a. துண்டுத்தணுக்குகள் நிறைந்த, பசையற்ற, கவர்ச்சி தராத, குடியினால் நிலையிழந்த.
Chips
n. pl. உருளைக்கிழங்கு வட்டுகள், உருளைக்கிழங்கு வற்றல், வற்றல், பணம், படைத்துறைத் தச்சர்.
Chip-shot
n. குழிப்பந்தாட்டத்தில் மெல்லெறிப் பந்தடி.
Chiragric, chiragrical
a. கைச்சந்துவாதம் சார்ந்த, கைவாத சூலையுடைய.
Chirk
v. அகவு, கூவு, கீச்சிடு.
Chirm
n. சந்தடி, இரைச்சல், குருவி வகையின் திரள், (வி.) கூவு, அகவு.
Chirograph
n. முறைப்படி எழுதிக் கையொப்பமிட்ட பத்திரம்.
Chiropodist
n. காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றின் மருத்துவ விற்பனர்.
Chiropody
n. காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றுக்கான மருத்துவம்.
Chiropractic
n. வர்மமருத்துவ முறை, தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுத்து நோவு குணப்படுத்தும் முறை.
Chiropractor
n. வர்ம முறை மருத்துவர்.
Chirp
n. பறவைகளின் குற்றுயிர்ப்பொலி, கிறீச்சொலி, பல்லியின் முரல் ஒலி, கலகலப்பு, மென்குரல் பேச்சு, (வி.) கலகல ஒலிசெய், முரல் ஒலி செய், கீசுசென்று இசை, மென்குரலில் முணுமுணு.