English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chitinous
a. தோட்டு முதற்பொருள் சார்ந்த, தோடான, தோடு, போன்ற.
Chiton
n. பண்டைக் கிரேக்கரின் மெல்லிய உட்சட்டை.
Chittack
n. வங்காள எடையளவுக் கூறு, ஆங்கிலக் கல்லெட்டையில் 16-இல் ஒரு பங்குக்கு ஒப்பான அளவை.
Chitterlings
n. pl. உணவுக்குரிய பன்றிச் சிறுகுடற் கொடிகள், சிறு விலங்கு உட்குடற் கூறுகள்.
Chitty
a. சிறுமதலையான, சிறுக்கியான.
Chivalric
a. வீரப்பெருந்தகை அமைப்புச்சார்ந்த, சான்றாண்மைக்குரிய.
Chivalrous
a. வீரப்பெருந்தகைமையுடைய, பெண்பாலரிடம் அன்பாதரவுடைய, சால்புமிக்க, விட்டுக்கொடுக்கின்ற, பெருந்தன்மைவாய்ந்த, வீரப்பண்பு நயத்துக்குரிய, முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய, சான்றாண்மைக்குரிய.
Chivalrously
adv. பெருந்தன்மையுடன், பெண்பாலருமையறிந்த பீடுடன், பெண்பாற் காப்புக்கடம் பூண்ட நிலையில், விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன்.
Chivalry
n. வீரப்பண்புமரபு, வீரதர்மம், நயநாகரிக வீரமரபு, வீரப்பெருந்தன்மை, காப்புக் கட்டுப்பாட்டுணர்வு, மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை, பண்பகலம், மன அகலம், பெருவீரம், சால்பு, மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு, அருள்வீரர் குழுமம், வீரச்சான்றோர் குழாம், குதிரை வீரர் தொகுதி.
Chive
n. வெங்காய இனப்பூண்டு வகை.
Chivvy, chivy
வேட்டைக்குரல், வேட்டை, பின்தொடர்கை, விளையாட்டு வகை, (வி.) வேட்டையாடு, பின்தொடர், துள்ளிக்குதி, துன்புறுத்து, தொல்லைப்படுத்து, பரிசுகெடு.
Chlamydospore
n. திண்தோற்சிதல்.
Chlamys
n. குட்டையான மேலுடுப்பு, செந்நீல மார்ச்சட்டை.
Chloasma
n. பொன்தவிட்டு நிறம் படரும் படைநோய் வகை.
Chloral
n. பாசிக உலர்வெறியம், நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌதவான நீர்மம், நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள்.
Chloralism
n. பாசிக உலர்வெறியப் பழக்கம், பாசிக உலர்வெறியந் தரும் மயக்கக் கோளாறு.
Chloralize
v. பாசிக உலர்வெறியமூட்டு, பாசிக உலர்வெறிய மூலம் மயக்கமூட்டு.
Chlorargyrite
n. வௌளிப்பாசிகை, கொம்பின் திண்ணியல்புடைய கனிப்பொருள் வகை.
Chlorate
n. பாசிகக்காடியின் உப்புவகை.
Chloric
a. பாசிகத்துக்குரிய, பாசிகங்கலந்துருவான.