English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chloride
n. பாசிகை, வேறொரு தனிமத்துடன் இயைந்த பாசிகம், வண்ணகத்தூள்.
Chlorimeter
n. பாசிகச்செறிவுமானி, வண்ணகத்தூளில் பாசிகச் செறிவை அளக்கும் கருவி.
Chlorinate
v. பாசிகச் செயற்படுத்து, நீரின் நுண்ம அழிப்பு வகையிலும் கனிவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் பாசிகத்கை ஈடுபடுத்து.
Chlorination
n. பாசிகச் செயற்பாடு.
Chlorine
n. (வேதி.) பாசிகம், நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.
Chlorite
n. ஊகநிலையான பாசிக்காடியின் (நீரகப்பாசிக மூவுயிரகையின்) உப்பு வகை.
Chlorite-schist
n. பாசிக உப்புக் கலந்த மடிப்புப் பாறை வகை.
Chloroformer, chloroformist
n. மயக்கமருந்து வழங்குபவர், மயக்க மருந்து ஈடுபடுத்துபவர்.
Chloromycetin
n. நச்சுக்காய்ச்சல்-முதுகந்தண்டுநோய், மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Chlorophyl, chlotophyll
n. பாசியம், இலை-தழை-தண்டுகளில் பசுமையூட்டும் கூறு.
Chloroplast
n. பாசணு, இலை-தழைகளில் பசுமைக்கும் காரணமான பாசியம் ஆக்கும் கூறு.
Chloroquin
n. முறைக்காய்ச்சலில் பயன்படுத்தப்படும் மருந்துச்சரக்கு.
Chlorosis
n. இளம்பெண்டிரின் பசலைத் தளர்ச்சிநோய், பசுமை நிறம் படரும் சோகை.
Chlorotic
a. இளம்பெண்டிரின் பசலைத்தளர்ச்சி நோய் சார்ந்த, பசுமைச் சோகைக்குரிய.
Chlorous
a. பாசிகச் சார்பான.
Chlotodyne
n. நோவகற்றும் கூட்டு மருந்துச்சரக்கு வகை.
Chlotoform
n. மயக்கமருந்து, எளிதில் ஆவியாகும் இனிமை கலந்த சுவையுடைய நிறமற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம், (வி.) மயக்கமருந்து வழங்கு.
Chock
n. ஆப்பு, அடைப்புக்கட்டை, அடைகல், முட்டுக்கட்டை, (கப்.) படகு வைப்பதற்குரிய அண்டைக்கட்டை, (வி.) ஆப்பிட்டிறுக்கு, அடைகல் வைத்து அசைவில்லாமல் செய்.
Chock-a-block
a. செம்மிய, மிடைந்து நிரம்பிய.
Chockful
a. திணிக்கப்பட்ட, முட்ட நிரம்பிய, செறிந்த.