English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Choky
-1 n. (இ.) சிறைக்கூடம், காவற்சாவடி.
Choky
-2 a. மூச்சடைக்க வைக்கிற, தடைப்படுத்துகிற.
Cholaemia
n. பித்த சோகை, குருதியில் பித்தநீர் தேங்குவதனால் ஏற்படும் நோய்.
Cholagogic
a. பித்தபேதி உண்டுபண்ணுகிற, பித்தபேதி மருந்துக்குரிய.
Cholecystitis
n. பித்தப்பை அழற்சி.
Cholecystostomy, cholecystotomy
n. பித்தப்பை அறுவை.
Choler
n. பித்தநீர், முற்கால ஐரோப்பிய மருத்துவக் கோட்பாட்டின்படி தாதுநீர் நான்கினுள் ஒன்று, கோபம், சினம், சிடுசிடுப்பு.
Cholera-belt
n. கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
Choleraic
a. வாந்திபேதிக்குரிய, கொள்ளைநோய் சார்ந்த.
Choleric
a. பித்தம் நிரம்பிய, (செய்.) கடுஞ்சினமுடைய, எளிதில் சீற்றம் கொள்ளுகிற, சிடுசிடுப்பான.
Cholerine
n. வேனிற்கால வாந்திபேதி.
Choliamb
n. கிரேக்க ரோம மொழிகளில் குறுந்துள்ளல்யாப்பு வகை, கடைச்சீர் மட்டும் இருநெடிலாயமைந்த மூ ஏறுசீர்யாப்பு.
Choliambic
a. மூ ஏறு சீர்யாப்புக்குரிய, குறுந்துள்ளல் யாப்பிலமைந்த.
Cholic
a. பித்தநீர் சார்ந்த.
Chondral
a. எலும்புக் குருத்தியலான, குருத்தெலும்பு சார்ந்த.
Chondre
n. பரற்குரு, வான்வீழ் கோளங்களிலும் கடலடிப் படிவங்களிலும் காணப்படும் உருள் பரல்.
Chondrify
v. எலும்புக் குருத்தாக மாறு.
Chondrin
n. எலும்பின் குருத்துமூலம், எலும்புக்குக் கரு மூலமான வெண்ணீல நிறமுடைய கெட்டிப்பான மணிப்பசைப் பொருள்.