English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chopping-knife
n. வெட்டுக்கத்தி.
Choppy
-1 a. கீறல் நிறைந்த, மேடுபள்ளமான, கரடுநிரடான, கொந்தளிப்பான.
Choppy
-2 a. விட்டுவிட்டுச் செல்கிற, அலைஅலையாய்ச் செல்கிற, எதிரெதிர்ப் போருக்குடைய, இசைவுப் பொருத்தமற்ற.
Choppy
-3 a. காற்றைப்போல நிலையற்ற, அடிக்கடி மாறுபடுகிற, விட்டுவிட்டுத் திசைமாறுகிற.
Chops
n. pl. குறட்டின் கௌவு வாய், பீரங்கியின் பேழ் வாய், உப்பலான முகமுடையவர்.
Chop-sticks
n. pl. சீனர் ஒரு கையால் உணவெடுத்தருந்தப் பயன்படுத்தும் தந்தத்தாலான குச்சியிணை.
Chop-suey
n. சீன நாட்டில் நல்லெண்ணெய்த் தாளித்த புலவுச் சோறுவகை.
Choragic
a. ஆடல்பாடல் குழுத்தலைவருக்குரிய.
Choragus
n. கிரேக்க நாட்டின் ஆடல்பாடற்குழுவின் அமைப்பாளர், ஆடல்பாடல்குழு இயக்குநர்.
Choral
-1 n. எளிய இன்னிசைப்பாட்டு, தேவபாணிப் பாசுரம், ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் பாடகர் குழு முழுமையும் இணைந்து பாடும் வழிபாட்டுப் பாடல்.
Choral
-2 a. பாடகர் குழாத்துக்குரிய, பாடற்குழுவினரால் மிழற்றப்பட்ட, பாடகர் குழாத்தின் உடனிசைப்புடைய.
Choralist
n. பாடற்குழுவினர், பாடகர் குழாத்தின் உறுப்பினர், பாடுவார்.
Chorally
adv. ஒரே பாடற்குழுவாக, பாடற்குழுவுக்கேற்ப, பாடகர் குழாத்தினைச் சார்ந்து, பாடகர்குழு உடனிசைக்கும் நிலையில்.
Chord
-1 n. யாழ்நரம்பு, வீணைக்கத்தி, (உட.) திண்ணிய நரம்பு நாளம், நாடி, (வடி.) வில்வளைவின் நாண்வரை.
Chord
-2 n. நிறஇயைபு, (இசை.) ஒத்திருக்கும் சுர இயைபு.
Chordal
a. யாழ்நரம்பு சார்ந்த, நரம்பு நாளம் சார்ந்த, நாண்வரைக்குரிய, தளைநாண்போன்ற, நிற இயைபுக்குரிய, தளைநாண் போன்ற, நிறஇயைபுக்குரிய, சுரஇயைபு சார்ந்த.
Chordate
n. தண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர்.
Chore
n. இடைக்கால வேலை, அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை, வீட்டுப்பெருக்கல் மெழுகல்வேலை, (வி.) நாட்கூலிக்கு வீட்டுவேலை செய், வீட்டுப்பெருக்கல் மெழுகல் வேலை செய், அவ்வப்போது தற்காலத்திய வேலை செய்.
Chorea
n. (ல.) காக்காய் வலிப்பு வகை.
Choree
n. நெடில் குறிலிணைந்த ஈரசைச்சீர்.