English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Choreic
-1 a. காக்காய் வலிப்புடைய.
Choreic
-2 a. நெடில் குறில் இணைந்த ஈரசைச் சீர்கொண்ட, நெடில் குறில் அடங்கிய ஈரசைச் சீருக்குரிய.
Choreograph, choreographer
n. கூடியாட்ட ஆடல்வகையின் அமைப்பாளர்.
Choreographic
a. கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய, ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய.
Choreography
n. ஆடற்கலை, கூடியாட்டவகைக்குரிய கலை, கூடியாட்ட வகைக் கலைக்குறியீட்டுப் பதிவு, ஆடல் தொகுதி அமைப்பாண்மை, கூடியாட்டவகை அமைப்பாண்மை.
Choriamb
n. நெடில் குறிலிணை நெடிலான நாலசைச்சீர்.
Choriambic
n. நெடில் குறில் இணை நெடிலான நாற்சீரடியாலான பாவகை, (பெ.) நெடில் குறில் இணை நெடிலான நாலசைச் சீர்சார்ந்த, நெடில் குறில் இணை நெடில் அசைகளடங்கிய.
Choric
a. கிரேக்க நாடகங்களின் ஆடல்பாடற் குழுவுக்குரிய, ஆடல் பாடல் குழுப்போன்ற.
Chorioid
a. கருப்பையின் புறத்தோல் போன்ற.
Chorion
n. கருப்பையின் புறத்தோல்.
Choripetalous
a. (தாவ.) தனித்தனி வேறொன இதழ்களையுடைய.
Chorisis
n. கிளைவழிப் பெருக்கம், கிளைப்பதன்மூலம் உறுப்புப் பலவாகும் முறை.
Chorister
n. பாடற்குழு உறுப்பினர், பாடற்குழுவிலுட்பட்ட சிறுவன், பாடற் பைதல்.
Chorographer
n. விரிநிலநுலார், மாவட்ட வாரியாக நிலநுல் விரித்தாராய்பவர்.
Chorographic, chorographical
a. விரிநில நுல் சார்ந்த, விரிநில நுலுக்குரிய.
Chorography
n. விரிநிலநுல், மாவட்ட வழியாக விரிந்து செல்லும் நிலநுல்.
Chorological
a. நிலப்பரப்பு வளம்சார்ந்த.
Chorologist
n. நிலப்பரப்பு வள ஆய்வாளர், பரப்பு வளத்துக்குரிய நில நுல் ஆராய்ச்சியாளர்.
Chorology
n. நிலப்பரப்பு வளநுல்.
Chorus
n. கிரேக்க நாடகங்களிலும் சமயவிழாக்களிலும் பங்கு கொள்ளும் ஆடல்பாடற்குழு, எலிசபத் அரசிகால ஆங்கில நாடகங்களில் முகப்புரையும் இடை நிகழ்வுரையும் ஆற்றியவர், சூத்திரக்காரர், பாடகர்குழு, பலர் கூடிப் பாடும் பாடல், பலர் குரல் பேச்சு, (இசை.) பல சுதிக் குரலிணைவு, கேட்போரும் கலந்து கொள்ளும் பல்லவிப் பகுதி, (வி.) பாடகர்குழுவில் இணைந்து பாடு, குழுவின் குரலில் இணைந்து பேசு.