English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chondrite
n. பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம், எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம்.
Chondropterygii
n. pl. எலும்பின் குருத்தினம், முதிரா எலும்பு மூலப்பொருளை எலுபுக்கூடாக உடைய சுறா முதலிய மீனினங்களை ஒத்த உயிரினம்.
Chondrus
n. எலும்பின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசி இனம்.
Chondrus
-2 n. எலும்பின் குருத்து, முதிர்ச்சிபெறா நிலையிலுள்ள கருமூல எலும்பு.
Choose
v. தேர், பலவற்றினின்று தேர்ந்நெடு, பொறுக்கியெடு, ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு, விரும்பித்தேர், விருப்பந்தெரிவி, விரும்பு, துணிந்தெடு, துணி, தேர்வுசெய், தக்கதெனக் கருது, ஒரு முகமாகத் தீர்வு செய், பிரதிநிதியாகத் தெரிவுசெய், துணைவராகத் தேர்ந்துகொள்.
Chooser
n. தெரிந்தெடுப்பவர்.
Chop
-1 n. வெட்டுதல், வெட்டிக் கூறுபடுத்திய உணவு, வெட்டுத்துண்டு, கறித்துண்டு, எலும்புடன் துண்டிக்கப்பட்ட இறைச்சிக்கண்டம், நீர்ப்பரப்பில் வேலி எதிர்த்துக் காற்றினால் ஏற்படும் முறிபள்ளம், பிளவு, (வி.) வெட்டு, துண்டித்துத் தள்ளு, குறுக நறுக்கு, ஒலி, குத்து, இடி,
Chop
-2 n. விலங்கின் தாடை, மூஞ்சி, மோவாய், கன்னம், கதுப்பு, பன்றிபோன்ற விலங்கின் கீழ்த்தாடை அல்லது கதுப்பு இறைச்சித்துண்டு, பற்றுகருவியின் அலகு, (வி.) விழுங்கு, கடித்து நொறுக்கு.
Chop
-3 n. (இ.) இந்தியா-சீனா போன்ற நாடுகளில் முத்திரை, பொறிப்பு, முத்திரைப் பொறிப்பிட்ட பத்திரம், தனி இசைவாணைச் சின்னம், சரக்குத்தரத்தின் அடையாளம், பண்புப்படி, தரம்.
Chop
-4 n. மாற்றம், திசைதிருப்பம், பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல், (வி.) மாறுபடு, திசை திரும்பு, பண்டமாற்றுச் செய்.
Chop-chop
விரைவாக, உடனடியாக, தாமதமின்றி.
Chop-fallen
a. நாடிதளர்ந்த, முகஞ்சோர்ந்த, கிளர்ச்சியற்ற, ஊக்கம் குலைந்த.
Chop-house
n. மலிவான உணவுவிடுதி.
Chopin
-1 n. பிரான்சின் நீர்மங்களுக்குரிய பழங்காலச் சிறுமுகத்தலளவைக் கூறு.
Chopin(2), chopine
n. சேற்றில் செல்வதற்கு உதவியாகப் புதையடிகளுக்கிடும் உயரிய அடிக்கட்டை.
Chop-logic
n. விதண்டாவாதம், நச்சுவாதம்.
Chopper
n. வெட்டுபவர், தறிப்பவர், கைக்கோடரி, வெட்டுக்கத்தி, விட்டுவிட்டு உரக்கப்பாடும் பறவை வகை.
Chopping
n. வெட்டுதல், சிதைத்தல், வெட்டுத்துண்டுகளின் தொகுதி, வெட்டப்பட்ட அளவு, குறைக்கப்பட்ட பொருள், மஜ்ம் வெட்டப்பட்டுக் கிடக்கும் காட்டுப்பகுதி, (பெ.) வெட்டுவதற்குரிய, நிலையற்ற.
Chopping
-2 a. குழந்தை வகையில் தடித்த, உறுதியான, கொழுமழுவான.
Chopping-block
n. தறிப்பதற்குரிய அடிக்கட்டை, பட்டடைக்கட்டை.