English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chrism
n. திருக்கோயில்களில் பயன்படுத்தப்படும் திருமுழுக்கு நெய்.
Chrismal
n. திருமுழுக்கு நெய் வைக்கப்படத்தக்க பேழை, பெயரீட்டு விழாவின் போது பயன்படுத்தப்படும் திரை, (பெ.) திருமுழுக்கு நெய்யைக் குறித்த, திருமுழுக்குக்குரிய.
Chrismatory
n. திருமுழுக்கு நெய்க்குரிய கலம்.
Chrisom
n. பெயரிட்டு விழாவில் குழந்தை மீதிடப்படும் மெல்லாடை, பெயரிடுவதற்குரிய குழந்தை, ஒருமாதக் குழவி.
Chrisom-child
n. பெயரிடுவதற்குரிய குழந்தை, ஒருமாதக் குழவி.
Christ
n. திருப்புதல்வர், மீட்பர், இயேசு கிறித்து.
Christen
v. பெயரீட்டு விழாவில் கிறித்தவப் பெயர் சூட்டு, திருத்தீக்கை விழாவினால் கிறித்தவனுக்கு, கிறித்துவின் பெயரால் நாமச்சூட்டு, பெயரிடு, பெயரிட்டழை, குழூஉப் பெயர் சூட்டு.
Christendom
n. கிறித்தவ உலகு, கிறித்தவ நாடுகளின் தொகுதி, உலகக் கிறித்தவர் குழு.
Christian
n. கிறித்தவர், இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர், இயேசுவைப் பின்பற்றுபவர், இயேசுவை நம்புபவர், இயேசுவின் பண்பாளர், கடவுட்பற்றாளர், நல்லார், தக்கார், மனிதர், (பெ.) கிறித்தவ, இயேசுகிறித்துவுக்குரிய, கிறித்தவ சமயஞ்சார்ந்த, இயேசுவின் திருச்சபைக்குரிய, இயேசுவைப் பின்பற்றுகிற, இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட, இயேசுவின் பண்பு அளாவிய, கடவுட்பற்றார்ந்த, தகுதிவாய்ந்த, அருளிரக்கமுடைய, மனிதப்பண்பு நிரம்பிய.
Christiania
n. பனிச்சறுக்கலில் திடீர் நிறுத்தத்துக்கு உதவும் திருப்பச் சறுக்கல் முறை.
Christianism
n. கிறித்தவ இயல்பு, கிறித்தவப் பண்பு, கிறித்தவர் சமயக்கோட்பாடு.
Christianity
n. கிறித்தவ சமயம், கிறித்தவ சமயநெறி முறை, கிறித்தவ சமயக்கோட்பாடு, கிறித்தவப் பண்பு.
Christianize
v. கிறித்தவ சமயத்துக்கு மாற்று, கிறித்தவ மயமாக்கு, கிறித்தவராக்கு, கிறித்தவப் பண்பூட்டு.
Christian-like
a. கிறித்தவத் தகுதிவாய்ந்த.
Christianly
a. கிறித்தவப் பண்புக்குகந்த.
Christianzation
n. கிறித்தவராக்குதல், கிறித்தவ மயமாக்குதல், கிறித்தவப் பண்பூட்டுதல், கிறித்தவராதல்.
Christie, n. Christiania
என்பதன் சுருக்கக் குறிப்பு.
Christies
n. லண்டன் மாநகரில் கலைப்பொருள் விற்பனையிடப் பெயர்.
Christless
a. இயேசுகிறித்து இல்லாத, இயேசுகிறித்துவிடம் நம்பிக்கையற்ற, கிறித்தவப் பண்புக்கொவ்வாத.
Christ-like
n. இயேசுகிறித்து போன்ற, இயேசுநாதரின் பண்புவாய்ந்த, இயேசுநாதரின் செயலொத்த.