English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chromogram
n. கலப்பால் இயற்கை வண்ணந்தரும் பல் வண்ணத் தொகுதி.
Chromograph
n. வண்ணச் சாயமூலம் எடுக்கப்படும் பசைமப் படியெடுப்புக் கருவி, (வி.) வசைமப் படியெடுப்புக்கருவி மூலம் படியெடு.
Chromolithograph
n. வண்ணக்கல் அச்சு, வண்ணந்தோய்த்து அடிக்கத்தக்க கற்படிவ அச்சு.
Chromolithographer
n. வண்ணக்கல் அச்சாளர்.
Chromolithographic
n. வண்ணக்கல் அச்சுக்குரிய.
Chromolithography
n. வண்ணக்கல் அச்சு முறை.
Chromoscope
n. வேறுவேறு நிற வடிவங்களை இணைத்துக் காட்டும் கருவி.
Chromosome
n. இனக்கீற்று, உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
Chromosphere
n. கதிர் மண்டலம் சூழ்ந்து போர்த்துள்ள வெவ்வளி வட்டம்.
Chromo-typography
n. வண்ண அச்சு வேலை.
Chromo-xylography
n. வண்ண மரப்பாள அச்சு முறை.
Chronic
n. நாட்பட்ட நோயாளி, சீர்ப்பட முடியாதவர், (பெ.) நாட்பட்ட, நீடித்த, சீர்கேடுற்ற, எளிதில் உருப்பட முடியாத.
Chronical
a. நாட்பட்ட, சீர்கேடுற்ற.
Chronicle
n. ஆண்டுக் கணிப்பு, தொடர்வரலாறு, செய்திப் பட்டியல், நிகழ்ச்சித் தொடர் கதை, (வி.) தொடர்புபடுத்திப் பதிவு செய், காலவரன் முறையாக எழுது, வரிசையாகக் கூறு.
Chronicler
n. நிகழ்ச்சித் தொகுப்பாளர், வரலாற்றுப் பதிவாளர்.
Chronique scandaleuse
n. (பிர.) அலர் தூற்றல் தொகுப்பு.
Chronogram
n. ஆண்டுக் குறிவாய்பாடு, இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு.
Chronogrammatic
a. ஆண்டுக்குறி வாய்பாடு குறித்த, எழுத்துக்களிலிருந்தே ஆண்டுக்குறிப்பு தருகிற.
Chronograph
n. நுட்பதிட்பமுடைய காலக் கணிப்புப்பொறி, நொடிப்பொழுது காட்டும் மணிப்பொறி, விசை கணித்துக் காட்ட உதவும் நுண் மணிப்பொறி, ஆண்டுக் குறிவாய்பாடு.
Chronographer
n. காலக்கணிப்பு வரலாற்றாளர், ஆண்டுக்குறிவாய்பாடு வகுப்பவர்.