English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chrysophilite
n. பொன் ஆர்வலர்.
Chrysoprase
n. அக்கிக்கல், பச்சைமணிக்கல் வகை.
Chrysotile
n. பாம்புத்தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை.
Chthonian, chthonic
அடிநிலத்துக்குரிய, கீழுலகுக்குரிய.
Chub
n. மேல்புறம் கரும்பசுமையான கொழுவிய சிறிய ஆற்று மீன்வகை.
Chubbed, chubby
உருண்டு திரண்ட, கொழுங்குட்டையான, உருண்டு திரண்ட வட்ட முகமுடைய.
Chub-faced
a. கொழுமையான முகத்தையுடைய.
Chuck
-1 n. பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி, கோழியை அழைப்பதற்குரிய ஒலி, குதிரை ஊக்கொலி, கோழிக்குஞ்சு, செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்), (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி, குரல் கொடுத்துக் கோழியை அழை, குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு.
Chuck
-2 n. தாடையின் கீழ்ச் செல்லமாகத் தட்டுதல், சுண்டுகை, எறிவு, பூவா காயா எனக் கண்டு முடிவு காணும் வியையாட்டு வகை, நீக்கம், தள்ளுபடி, சிறு கூழாங்கல், (வி.) தாடையின் கீழ்ச் செல்லமாகத் தட்டு, சுண்டு, எறி, நீக்கு, ஒதுக்கித்தள்ளு.
Chuck
-3 n. கட்டி, முண்டு, சுழல் கொளுவு வார், பணிக்குரிய பொருள்களை ஏந்தி வாக்காகச் சுற்றவல்ல தோல்வார், இயந்திரப்பணி ஏந்தமைவு.
Chucker-out
n. வேண்டாதவரை வேலையிலிருந்து நீக்குபவர்.
Chuck-farthing
n. சிறு நாணயத்தைக் குழிகளில் சுண்டி வீழ்த்தி விளையாடும் விளையாட்டு வகை.
Chuck-full
a. முழுதும் நிரம்பிய.
Chuckie
-1 n. சிறுகோழிக்குஞ்சு.
Chuckie
-2 n. சிறு கூழாங்கல்.
Chuckies
n. pl. சிறு கூழாங்கற்கள் கொண்டு விளையாடும் விளையாட்டு வகை.
Chuckle
-1 n. கோழி கொக்கரிப்பு, அல்ங்கிய சிரிப்பு, வாய் மூடி நகைப்பு, ஏளனநகை, அகமகிழ்வு, (வி.) கொக்கரி, கோழியின் அடங்கொலி செய், உள்ளரநகு, வாய்விடாது சிரி, கேலியாக நகைசெய், எக்களி, அகமகிழ், தருக்கிக் களிப்புறு.
Chuckle
-2 a. அருவருப்பான தோற்றமுடைய.
Chuckle-head
n. மட்டி, மண்டு.
Chuckle-headed
a. மூளையற்ற.