English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Church-going
n. வழக்கமாகக் கோயிலுக்குச் செல்லுதல், (பெ.) வழக்கமாகக் கோயிலுக்குச் செல்கிற, கோயிலுக்குச் செல்லுகிற.
Churchianity
n. இயேசுநாதருக்குப் பதிலாகத் திருச்சபையையே மையமாகச் சார்ந்த சமயப்பண்பு.
Churching
n. புனிற்றிளந்தாயின் திருக்கோயில் வழிபாட்டேற்பு வினை, புனிற்றிளந்தாயை வழிபடுவித்தல்.
Churchism
n. சமயக்கிளையினைப் பின்பற்றும் குறுகிய வினைமுறைப்பற்று.
Churchless
a. தனித்திருச்சபைத் தொடர்பற்ற, தனிச் சமயக்கிளைத் தொடர்பற்ற.
Churchly
a. திருக்கோயில் தொடர்புடைய, திருச்சபைச் சார்புடைய.
Churchman
n. திருச்சபைக் குரு, நிலைபேறுற்ற திருச்சபை உறுப்பினர், நிலைபேறுற்ற திருச்சபை ஆதரவாளர்.
Church-mouse
n. திருக்கோயில் சுண்டெலி நிலையில் இடையறா வறுமைக்கு ஆட்பட்டவர்.
Church-parade
n. திருக்கோயில் செல்வதற்குரிய படைத்துறைப்பாணி அமைந்த அணிவகுப்பு, வழிபாட்டுக்குப்பின் வழிபாட்டாளர் அணிவகுப்பு.
Church-rate
n. ஊர்க்கோயில் காப்பு வரி.
Church-service
n. திருக்கோயில் வழிபாட்டுத் திருவினை, திருவழிபாட்டு வினைமுறை, வழிபாட்டு வினைமுறைத் திருவேடு.
Churchward
a. ஒடுங்கி உயர்ந்த கெட்டி அச்செழுத்து உருப்படிவம்.
Churchwarden
n. ஊர்த்திருக்கோயில் காப்பாளர்.
Churchwards
adv. திருக்கோயில் நோக்கி, திருச்சபை நோக்கி.
Churchwoman
a. திருச்சபையின் பெண்பால் உறுப்பினர், ஆங்கில நாட்டுத் திருசபை ஆதரவாளரான பெண்பாலர்.
Churchy
a. மிகமுனைப்பான திருச்சபைச்சார்பு மேற்கொண்ட, திருச்சபை வெறியார்வமுடைய, திருச்சபையின் நீங்காத்தடம் கொண்ட.
Churchyard
n. திருக்கோயில் சுற்றுப்புறத்தை அடுத்துள்ள கல்லறை வௌத.
Churl
n. கீழ்மகன், பண்பற்றவன், கயவன், முரடன், நாகரிகமறியாத குடியானவன், நாட்டுப்புறத்தான், காட்டான்.
Churlish
a. காட்டினத்தன்மையுடைய, முரட்டுத்தனமான, பண்பாடற்ற, தன்மூப்புடைய.
Churn
n. வெண்ணெய் கடையும் பொறி, கடைவதற்குரிய போகணி, (வி.) கடை, நுரையெழக் கலக்கு, தயிர் கடைந்து வெண்ணெய் எடு, கடைபொறி இயக்கு, கடல் நீரைக் கொந்தளிக்க வை.