English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Churn-dash, churn-dasher
n. மத்து, கடைவதற்குரிய பொறி.
Churn-drill
n. கைக்கடைசல் மூலம் துளையிடும் கருவி.
Churning
n. கடைதல், வெண்ணெய் எடுத்தல், ஒரு கடைவு வெண்ணெய்.
Churr
n. புள்வகையின் கூர்த்த சில்லொலி, (வி.) புள்வகையின் கூர்த்த சில்லொலி எழுப்பு, கூவிளி செய்.
Churrus
n. (இ.) கஞ்சா, வெறிப்புகை தரும் சணல் வகையின் பிசின்.
Churr-worm
n. சதுப்பு நிலப் பாச்சை வகை.
Chut
int. 'சூ', 'வாய் மூடு', பொறுமையிழப்புக் குறி.
Chute
n. மென்சரிவோடை, சரக்குக் கொண்டுயர்ப்பதற்குரிய சாய் நீரோடை, சரக்குக் கொண்டுய்ப்பதற்குரிய சறுக்குச் சாய்வு நெறி, குப்பை கழிபொருள்களைத் தொலைவாக்கும் சாய்சரிவு, பனிச்சறுக்கு வழி.
Chutnee, chutney
(இ.) காரத்துவையல்.
Chyle
n. உணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வௌளை நிணநீர்.
Chyluria
n. சிறுநீரில் உணவுப்பாற்கூறு காணும் உடற் கோளாறு.
Chyme
n. உணவுச்சாறு, குடலில் உருவாகும் உணவின் குழம்பு.
Chymification
n. உணவு குழம்பாக மாறும் மாறுபாடு, உணவு குழம்புருவாக மாறுபடுதல்.
Chymify
v. உணவு வகையில் குழம்பாக மாறுபடு.
Chypre
n. சைப்பிரஸ் தீவிலிருந்து வரும் நறுமணப் பொருள் வகை.
Ciborium
n. ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம், திவ்விய நற்கருணைப் பாத்திரம், பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Cicada, cicala
சிள் வண்டு, சுவர்க்கோழி.
Cicatrice
n. புண் தழும்பு, மரப்பட்டை வடு, இலை உதிர் தடம், விதை வரை.