English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cigarette
n. சிகரெட்டு, புகைப் பூஞ்சுருள்.
Cigarette-card
n. புகைப்பூஞ்சுருள் கட்டுடன் வழங்கப்படும் சிறு பட அட்டை.
Cigarette-paper
n. புகைப்பூஞ்சுருள் செய்யப் பயன்படும் தாள் வகை.
Cigar-holder
n. புகைச்சுருள் வைத்துப் புகை உட்கொள்வதற்குரிய கொள்குழல்.
Cigar-shped
a. புகைச்சுருள் வடிவான, உருட்சியும் நீட்சியும் உடைய.
Cilia
n. pl. கண்ணிமை மயிர், இலையில் இமை போன்ற இழை, பூச்சிச் சிறகின் ஓர இழை, (உட.) இழையுறுப்பு, கீழின உயிர்களில் கால்போலப் பயன்படும் இழை உறுப்பு.
Ciliary
a. கண்ணிமை சார்ந்த, மயிர்போன்ற உறுப்புக் கொண்டுள்ள, இழை உறுப்புச் சார்ந்த.
Ciliate, ciliated
இழை உறுப்புக்களைக் கொண்ட, இழைமயிர் ஓரமுடைய.
Ciliation
n. மயிர்போன்ற உறுப்பால் இயங்கும் தன்மை.
Cilice
n. மயிர்த்துய்யாடை, தன் பழி ஒறுப்புக்குரிய சின்னமான ஆடை.
Cilicious
a. மயிர்த்துய்யாலான.
Ciliolate
a. மெல்லிய மயிர்களாலான ஓரமுடைய.
Cilium, n. Cilia
என்பதன் ஒருமை வடிவம்.
Cillegiate
n. சிறைக்கைதி, (பெ.) கல்லுரி சார்ந்த, கலைக்குழுவுக்குரிய, உரிமைக்குழுவிற்குரிய, கல்லூரி போன்ற, கல்லூரியையுடைய, கல்லுரி போன்ற அமைப்புக்கொண்ட, ஓரமைப்பாகச் சேர்ந்துள்ள.
Cimar
n. திருச்சபை மாவட்ட முதல்வர் மேலங்கி, கையற்ற உடை.
Cimelia
n. pl. பொருட்குவியல்கள், கருவூலங்கள்.
Cimier
n. தலைக்கவசத்தின் முகடு.
Ciminite
n. பாறை வகை, நெருப்புக் கற்பாறைக்கும் எரிமலைப் பாறைக்கும் இடைப்பட்ட பாறை வகை.
Cimmerian
a. என்றென்றும் இருளிலேயே வாழ்ந்ததாகக் கூறப்படும் 'சிம்மெரி' என்ற மரபுக் குழுவைச் சார்ந்த, இருள் கவிந்த, கருமை செறிந்த.
Cimolite
n. உவர்க்களிமண், களிமண்வகை, அலுமினியச் சிலிகை நீர்மம்.