English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cinch
n. மெக்சிகோவில் வழங்கும் சேணச் சுற்றுவார், (பே-வ.) உறுதியான கருத்து, பாதுகாப்பான பிடிப்பு, (வி.) சேணச் சுற்றுவாரை இறுக்கு.
Cinchona
n. காய்ச்சல் மருந்துப் பொடிக்குப் பயன்படும் பட்டை, சிங்கானா பட்டை, காய்ச்சல் பொடிக்குரிய பட்டை தரும் தென் அமெரிக்க மரம்.
Cinchonic
a. சிங்கானா என்னும் மரப்பட்டையைச் சார்ந்த.
Cinchonine
n. சிங்கானா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் காரச்சத்து.
Cinchoninic
a. சிங்கானா மரப்பட்டையின் காரச் சத்து சார்ந்த.
Cinchonism
n. பட்டையிலுள்ள காரச்சத்தின் ஆற்றல் அளவு கடந்து செயற்படுவதால் ஏற்படும் கோளாறு.
Cinchonize
v. சிங்கானா பட்டையின் காரச்சத்தின் ஆற்றல் செயல்படச்செய்.
Cincinnatus
n. ஒதுங்கி வாழ்ந்து நெருக்கடி நேரத்தில் வந்துதவும் இயல்புடைய பெரியார், உழவு வாழ்விலிருந்து தனி வல்லாட்சிப் பொறுப்பேற்க அழைக்கப்பட்ட ரோம வீரர்.
Cincinnus
n. (தாவ.) தண்டிலிருந்து ஒரேகிளை ஒரே நுனி மலர்க்கொத்துடன் மாறிமாறி எதிரெதிதாகக் கிளைக்கும் செடிவகை.
Cincture
a. அரைக்கச்சை, இடைவார், சுற்று வளையம், நெற்றிப் பட்டம், தலைக்கட்டு, தூணின் சுற்றுக்கட்டு, (வி.) சுற்றிக்கட்டு, சூழ்.
Cinder
n. அரைக்கச்சையுள்ள, சூழ்பட்டமுடைய.
Cinder-cone
n. கங்கு, தணல், கனல், எரிந்துபோன நிலக்கரி, தணல்கரி, கனல்கட்டை, சாம்பல், தீயால் கரியாக்கப்பட்ட பொருள், நீராவித்துளைகளுள்ள எரிமலைக்குழம்புத்துண்டு.
Cinderella
n. பாராட்டப்படாத அழகுடையவர், புறக்கணிக்கப்பட்ட பண்பு உடையவர், வெறுத்து ஒதுக்கப்பட்டவர், சமையல் பின்னறைப் பணிப்பெண்.
Cinderella-dance
n. நள்ளிரவில் முடியும் நடன நிகழ்ச்சி.
Cinder-path
n. கரித்தூள் பாட்டை, தீக்கரிப் பொருள்களால் சமனிடப்பட்ட ஓட்டப்பந்தயப் பாதை.
Cinder-sifter
n. கரியையும் சாம்பலையும் வேறாக்கும் சல்லடைக் கருவி.
Cindery
a. கங்கு கரியான, சாம்பரான.
Cine-biology
n. திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி.
Cine-camera
n. திரைப்படத்துக்குரிய நிழற்படக் கருவி.
Cine-film
n. திரைப்படச் சுருளின் மென்தகடு.