English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cinertious
a. சாம்பல் வண்ணமுடைய, சாம்பல் நிற நரம்புப் பொருள்ச் சார்ந்த.
Cine-variety
n. திரைப்படக் காட்சியடங்கிய பலவகைக் களியாட்டம்.
Cingulum
n. (ல.) அரைக்கச்சை, வளையம், சுற்றி வளைந்துள்ள அமைப்பு.
Cinnabar
n. சிவப்பு நிறமான கனிப்பொருள் வகை, இரசக்கந்தகை, (பெ.) குருதிச் சிவப்பான.
Cinnabaric, cinnabarine
a. இரசக் கந்தகையைச் சார்ந்த, கந்தகையை உட்கொண்ட, இரசக் கந்தகையாலான, இரசக் கந்தகை போன்ற.
Cinnamate
n. இலவங்கக் காடி உப்பு, இலவங்கக் காடிமம்.
Cinnamon
n. இலவங்கப் பட்டை, இலவங்க மஜ்ம், மென்மையான மஞ்சள் தவிட்டுநிறம், (பெ.) இலவங்கப் பட்டையைச் சார்ந்த, இலவங்க மரத்தைச் சார்ந்த, மென்மையான மஞ்சள் தவிட்டு நிறமுள்ள.
Cinnamon-bear
n. வட அமெரிக்க மஞ்சள் தவிட்டு நிறக் கரடிவகை.
Cinnamonic
a. இலவங்கத்தைச் சார்ந்த, இலவங்கத்திலிருந்து கிடைத்த.
Cinnamon-stone
n. தவிட்டு நிற அல்லது மஞ்சள் வண்ண மாணிக்கக் கல்வகை.
Cinq
n. ஐந்தெண் கவறு, ஐந்தெண் சீட்டு.
Cinque Ports
n. pl. (வர.) இங்கிலாந்தின் தென்கரையிலுள்ள துறைமுகங்கள்.
Cinquecentist
n. மறுமலர்ச்சி சிற்பக் கலைஞர்.
Cinquecento
n. பதினாறாவது நுற்றாண்டு மறுமலர்ச்சிக்கு உரிய கலை சிற்ப வகை.
Cinquefoil
n. (கட்.) ஐந்து இதழ்களையுடைய மலர்முகப்பு உருவம், (க-க.) வாயில் பலகணி வளைவுகளில் ஐயிதழ் அணி உரு, (தாவ.) ஐந்து அலகுகளையுடைய மணப்புல்.
Cinque-pace
n. ஐயடி ஆல்ல்கூறு வகை.
Cipher
n. சுழி, சுன்னம், இன்மைக்குறி, தான வெறுமைக்குறி, பயனற்றது, பயனற்றவர், மதிப்பு ஏதுமற்றவர், முக்கியத்துவமற்ற ஆள், அரபு இலக்கம், அரபுக்குறியீடு, பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு, சொற்குறி, புரியா எழுத்து, மறைகுறியீடு, குறிப்பெழுத்து, மறை திறவு, இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி, (வி.) கணக்குச் செய், கணக்கீடு, திட்டம் செய், மறை எழுத்தாக்கு, மறைகுறியீடாக எழுது, கணி, திட்டமிடு, இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய்.
Ciphering
n. மறைகுறிப்பாக எழுதுதல்.
Cipher-key
n. குறியீட்டெழுத்தின் மறை திறவு.
Cipolin, cipollino
பச்சைப் பட்டையுடைய இத்தாலிய வெண் சலவைக்கல்வகை, அப்பிரகமும் வௌதம கன்மகியும் இடைமிடைந்த சுண்ணக் கரியகி.