English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Circuity
n. வளைநெறி, சுற்றி வளைத்துச் செல்லும் முறை.
Circulable
a. சுற்றிப்பரப்பத்தக்க.
Circular
n. சுற்றறிக்கை, சுற்றோலை, (பெ.) வட்டமான, வட்டத்தைச் சார்ந்த, சுற்றி வருகிற, மண்டலிக்கிற, தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான, சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற, பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.
Circularity
n. வட்டமாக உள்ள தன்மை.
Circularize
v. வட்டமாகச் செய், சுற்றறிக்கை அனுப்பு.
Circulate
v. சுற்றிச் செலுத்து, பரப்பு, எங்கும் செல், பரவு, மண்டலி, (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ.
Circulation
n. சுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை.
Circulative
a. சுற்றோட்டம் ஊக்குகிற, சுற்றியோடுகிற, எங்கும் பரவுகிற.
Circulator
n. பரப்புகிறவர், செய்தி பரப்புபவர், தூற்றுபவர், புரளிக்காரர், நாணயச் செலவாணியாளர்.
Circulatory
a. சுற்றுகிற, பரவுகிற, சுழல்கிற, குருதியோட்டம் சார்ந்த, தாவர உணவுச் சாற்றின் சுழற்சிக்குரிய.
Circumambages
n. pl. சுற்றி வளைத்த பேச்சு.
Circumambience, circumambiency
n. சுற்றி வளைத்துச் செல்லும் தன்மை, சூழ்வு, சுற்றி வளைத்தல்.
Circumambient
a. சுற்றி வளைக்கும் தன்மையுடைய, சுற்றிச் சூழ்ந்துள்ள.
Circumambulate
v. சுற்றித்திரி, சுற்றி நட, வளைந்து செல், பயனில் முயற்சி செய்.
Circumambulation
n. சுற்றிச்செல்லல், வீண்முயற்சி செய்தல்.
Circumbagious
a. சுற்றி வளைத்துப் பேசுகிற, நேராகப் பேசாத.
Circumbendibus
n. சுற்றி வளைத்துப் பேசுதல், சுற்றுமுக நடவடிக்கை.
Circumcentre
n. (வடி.) புறநிலை வட்ட மையம், முக்கோணம் முதலிய வடிவுருக்களின் புறக்கோடி தொட்டுச் செல்லும் வட்டத்தின் மையம்.
Circumcision
n. தோல் நுனியிதழ் அகற்றும் வினை, சுன்னத்து வினைமுறை, சுன்னத்து விழா, சுன்னத்துச் செய்துகொள்ளும் நிலை, யூத இனம்.