English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cippus
n. தண்டனைக்காகக் கணைக்காலில் பூட்டப்படும் கால் கட்டை, தூபி.
Circa
prep. (ல.) ஏறத்தாழ, குத்தாயமாக.
Circassian
n. ருசியாவிலுள்ள சர்கேசிய பகுதிக்குரிய 'காகேசிய' மரபுக் குடியினர், காகேசிய மரபுக் குழுவினரின் மொழி, (பெ.) காகேசிய மரபுக் குடியினருக்குரிய, காகேசிய மரபுக் குடிவகையின் மொழி சார்ந்த, காகேசிய பகுதியைச் சார்ந்த.
Circassian, circassienne
n. மென்மையான கம்பளி வகை.
Circe
n. கிரேக்க புராணப் பெண் மாயாவி, மாயக்காரி, சூனியக்காரி.
Circean
a. கிரேக்க புராணப் பெண் மாயாவியான செர்ஸியைச் சார்ந்த, கீழ்த்தர மாயத்துக்குரிய, சூனியஞ் சார்ந்த.
Circinate
a. வளைய உருவான, மோதிர வடிவுள்ள, (தாவ.) இலைகள் வகையில் அடிநோக்கிச் சுருள்கிற.
Circle
n. வட்டம், வட்டச் சுற்றுவரை, வட்டமான பொருள், வளையம், கோளினத்தின் சுற்று நெறி, துவங்கிய இடத்தில் முடிவுறும் நிகழ்ச்சிக் கோவை, மாயச்சக்கரம், வட்டத்திற்குள்ளிருக்கும் பொருள்களின் தொகுதி, ஆளைச் சுற்றியுள்ள தொடர்புகொண்ட குழு, இனக்குழு, கூட்டுக்குழு, வகுப்பு, (வி.) சுற்றிச்செல், வளைந்து செல், வளையமாக அணிவகுத்து நில், சுற்றித் திரும்பு, சூழ், சுற்றிவளை, வட்டமாகச் செல்.
Circled
a. வட்டவடிவமான, சுற்றி வளைக்கப்பட்ட.
Circler
n. சுற்றிச் செல்பவர், சுற்றிச் செல்வது.
Circle-rider
n. கால்நடைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துவதற்காகக் குதிரைமேல் ஏறிச் சுற்றிச் செல்பவர்.
Circle-riding
n. கால்நடைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு போவதற்காக் குதிரை ஏறிச் சுற்றிச்சுற்றிச் செல்லுதல்.
Circlet
n. சிறுவட்டம், சிறு வளையம், சிறு முடி, நெற்றிப் பட்டம்.
Circling
n. வட்டமாகச் செல்லுதல், சுற்றி வருதல், வளையமிடம்.
Circuit
n. சுற்றுப்பயணம், சுற்றுலா, சுற்றிச் செல்லும் பாதை, சுற்றளவு, சுற்றான பாதை, சுற்றடைப்பு, வேலியிடப்பட்ட நிலப்பகுதி, மின்வலி இயக்கம் செல்லும் நெறி, உலா நடுவர் புடைபெயர்ச்சி, உலாநடுவர் குழு, 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை, வட்டகை, நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி, (வி.) சுற்றிச் செல்.
Circuit-breaker
n. மின் ஓட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு.
Circuiteer
n. சுற்றுலா நடுவர்.
Circuitous
a. சுற்று வளைவான.
Circuitousness
n. சுற்றி வளைந்து செல்லும் இயல்பு.
Circuit-rider
n. சுற்றுப் பயணம் செய்யும் சமய போதகர்.