English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Circumspection
n. விழிப்புடைமை, எச்சரிக்கையாயிருத்தல், கவனம், பரிசீலனை செய்தல்.
Circumspective
a. சுற்றிக் கவனிக்கிற, எச்சரிக்கையுடைய, விழிப்பான, எளிதில் ஏமாற்ற முடியாத.
Circumspectly
adv. எச்சரிக்கையாக, விழிப்பாக, கவனமாக.
Circumspectness
n. விழிப்போடுள்ள தன்மை, எச்சரிக்கையான நிலை.
Circumstance
n. சூழ்நிலை, கால இடச்சூழல், உடனிகழ்வு, தொடர்புடைய செய்தி, புறநிலைச் செய்தி, புறக்கூறு, நுணுக்க விவரம், புற ஆரவாரம், ஆசாரம், சடங்கு முறை, (வி.) சூழ்நிலையில் கொண்டுவிடு.
Circumstanced
a. சூழற்பட்டுள்ள, நிலைமைகளுக்குக் கட்டுப்பட்ட.
Circumstanceds
n. pl. சூழ்நிலைமைகள்.
Circumstantial
a. நுணுக்க விவரங்கள் அடங்கிய, தற் செயலான, முக்கியத்துவமில்லாத, சிறுதிற.
Circumstantiality
n. தற்செயலான தன்மை, நுணுக்க விவரங்கள் கொண்ட நிலை.
Circumstantially
adv. தற்செயலாக, நேர்முகத் தொடர்பில்லாமல், நுணுக்க விரிவாக, போலிப் புறத்தொடர்புடன்.
Circumstantials
n. pl. முக்கியத்துவமற்ற விவர நுணுக்கங்கள், நுணுக்க விவரங்கள்.
Circumstantiate
v. சூழ்நிலை வாய்ப்புக்களால் நிலைநிறுத்து, நுணுக்க விவரங்களால் மெய்ப்பி, நுணுக்க விரிவாக விளக்கு.
Circumvallate
v. கோட்டை மதில்களால் வளைத்துக் காப்பீடு செய், சூழ் அரண் காப்புச் செய்.
Circumvallation
n. மதில் சூழுதல், கோட்டைச்சுவர் அமைப்பு, நகரப் பாதுகாவல் அமைப்பு, (வில.) உணவைச் சூழ்ந்து பரவி உட்கொள்ளுதல்.
Circumvent
v. சுற்றிச்செல், வளைத்துக்கொள், மேற்சென்று செய்துமுடி, சூழ்ந்து கைப்பற்று, சுற்றி இடைமறி, பொறியுட்படுத்து, ஏமாற்று.
Circumvention
n. மேற்செலவு, சூழ்ந்து செயலாற்றுதல், சூழ்ச்சி.
Circumventive
a. சூழ்ச்சி செய்கிற, வளைத்து ஏமாற்றுகிற.
Circus
n. சுற்றிலும் வட்டடுக்கான இருக்கைமேடைகளையுடைய விளையாட்டு வேடிக்கைக்கான வட்டரங்கு, காட்சிக் கொட்டகை, சுற்றிலும் அடுக்கடுக்கான மலைக்காட்சிகளையுடைய நடுவரங்கப் பள்ளத்தாக்கு, தெருக்கள் நாற்புறமுமிருந்து வந்திணையும் வட்டவடிவான மையக் கூடல்வௌத, வட்டக் கட்டுமனைத்தொகுதி, உலா வரு காட்சிக்குழு.
Cirque
n. வட்டரங்கு, இயற்கைக் காட்சிக் கோட்டம்.
Cirrate
a. சுருட்டையான, தளிர்க் கைகள் போன்ற, (வில.) சுருண்ட இழைபோன்ற.