English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Civilization
n. நாகரிகம், நாகரிகமடைந்துள்ள நிலை, பண்பாடு, பண்பட்டநிலை, சமூக முன்னேற்றத்தில் மேம்பட்ட நிலை, நாகரிக உலகு, நாகரிகமடைந்துள்ள நாடுகள்.
Civilize
v. நாகரிகப்படுத்து, சீர்திருத்து, பண்பு பெறப்பழக்கு.
Civilized
a. நாகரிகமக்களுக்குரிய, பண்பு நிறைந்த மக்களின் இயல்புகள் வாய்க்கப்பெற்ற.
Civism
n. குடியுரிமைநலம், (வர.) 1ஹ்க்ஷ்ஹீ-ஆம் ஆண்டுக்கு உரிய பிரஞ்சுப்புரட்சியின் அடிப்படைக் கொள்கை பற்றிய ஆதரவு.
Clack
n. கடகடப்பு, சடசடப்பு, கட்டைகளை ஒன்றோடொன்று தட்டும்போது உண்டாவதைப் போன்ற ஓசை, கடகடப்பு ஒலி உண்டுபண்ணும் கருவி, பலருடைய பேச்சரவம், (பே-வ.) நா, (வி.) உரக்கப்பிதற்று, ஓயாது பேசு, மரக்கட்டைகள் கல்லின்மீது உராய்வது போன்ற ஒலியெழுப்பு, சடசட ஓசை உண்டுபண்ணு.
Clack-box
n. பொறியின் தடுக்கிதழ் கொண்ட பெட்டி.
Clack-damp
n. இருகரியகை வளியால் உயிர்வளி நீக்கப்பட்ட நச்சுக் காற்று.
Clack-value
n. இயந்திரங்களில் தடாலெனும் ஒலியுடன் மீளும்படி கீல் பொருத்தப் பெற்றுள்ள தடுக்கிதழ் அமைவு.
Clad
a. உடுப்பு அணிந்த, ஆடை அணிபூட்டப்பட்ட, ஒப்பனை செய்யப்பட்ட.
Cladding
n. உலோகத்துக்குரிய உலோகப்பொதிவு, அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொதிகாப்பு.
Cladocarpous
a. (தாவ.) சிறு பக்கக்கிளைகளில் காய்களை உடைய.
Cladode
n. (தாவ.) இலையின் தோற்றமும் செயற்பாடும் கொண்ட கிளை.
Claim
n. உரிமைக் கோரிக்கை, கோரிப்பெறும் தகுதி, கோரிக்கை உரிமை, பெறுவதற்கான உரிமை, கோரிப் பெறும் உரிமை உடைய பொருள், உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள், உரிமைப் பொருள், உரிமைப் பங்கு, சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், (வி.) உரிமை கோரு, உரிமையைக் கேள், உரிமை கொண்டாடு, உரிமைபற்றி வாதாடு, உரிமை வலியுறுத்து, மெய்யென வாதிடு, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள், தகுதி உடையதாயிரு.
Claimable
a. உரிமை கொண்டாடத்தக்க, உரிமை கோரத்தக்க.
Claimant, claimer
உரிமை கொண்டாடுபவர், உரிமை கோருபவர்.
Claim-jumper
n. சுரங்கமறுக்க மற்றொருவருக்குள்ள உரிமையைத் தமதாக்கிக் கொள்பவர்.
Clairaudience
n. சேணோசை, புலன்கடந்த கேள்வியாற்றல், பொறிகளுக்கு அப்பாற்பட்டவற்றைக் கேட்கும் ஆற்றல்.
Clairaudient
n. புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடையவர், (பெ.) சேணோசயுடைய, புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடைய, புலன்கடந்த கேள்வி ஆற்றலுக்குரிய.