English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Citric
a. (வேதி.) நாரத்தையிலிருந்து வடித்திறக்கிய.
Citrin
n. இழைக்குருதி நாளங்களின் முறிவௌதமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
Citrine
n. எலுமிச்சை நிறம், கரும்பச்சை மஞ்சள் நிறமான படிகப் பாறை, (பெ.) எலுமிச்சை வண்ணமுடைய.
Citron
n. நாரத்தை, துரிஞ்சி, நாரத்தை மரம், எலுமிச்சை நிறம்.
Citronella
n. மிகுவெப்ப மண்டலப் புல்வகை, மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
City
n. மாநகரம், பெரிய நகரம், முதன்மைவாய்ந்த பேரூர், உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம், மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம், நகரத்தில் வாணிக மைய இடம், நகரின் மூலமுதல் பகுதி.
Cityless
a. நகரம் இல்லாத.
Cityward
a. நகரம் நோக்கிய, (வினையடை) நகரத்தை நோக்கி.
Citywards
adv. நகரத்தை நோக்கி.
Cive
n. வெங்காய வகைச் செடியினம்.
Civet
n. புனுகுப் பூனை, புனுகு.
Civet-cat
n. புனுகுப் பூனை.
Civic
a. நகரம் சார்ந்த, நகரமக்களுக்குரிய, நகரவைக்குரிய, குடியுரிமைக்குரிய, குடிமக்களுக்குத் தகுந்த.
Civics
n. குடியியல், குடியுரிமை பற்றிய நூல்.
Civil
a. கூடிவாழும் இயல்புடைய, சமுதாயத்துக்குரிய, நடைநயமுடைய, நாகரிகமான, வணக்க இணக்கமான, சமுதாய வரம்பில்லாத, பொதுத்துறை சார்ந்த, படைத்துறை சாராத, சமயச்சார்பற்ற, குற்ற இயல் சாராத, (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய, தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த, இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Civilian
n. பொதுத்துறைச் சட்டப் பேராசிரியர், பொதுத்துறைச் சட்ட மாணவர், படைத்துறை சாராத அரசாங்க அலுவலர், (பெ.) படைத்துறை சாராத.
Civilist
n. பொது உரிமைத் துறைச் சட்ட வல்லுநர்.
Civility
n. நயநாகரிகம், பண்புநயம், பண்பட்ட பழக்க வழக்கமுறை, மட்டுமதிப்புப் பண்பு.
Civilizable
a. சீர்ப்படுத்தத்தக்க, நாகரிகப்படுத்தப்படத் தகுந்த.