English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Coin
n. உலோகப் பணம், முத்திரை கொண்ட நாணயம், பணம், காசு, (வி.) தம்பட்டமடி, நாணயம் உண்டு பண்ணு, முத்திரையிட்டு நாணயமாக்கு, புதிது புனை, படைத்துருவாக்கு.
Coinage
n. நாணயம் அடித்தல், நாணயத்தொகுதி, வழக்கிலுள்ள நாணயமுறை, புதுப்புனைவு, புதுப்படைப்பு, புதுப்புனைவான சொல், புதிதாகப் படைக்கப்பட்டது.
Coincide
v. மேவு, தற்செயலாக ஒரே இடத்தில் வந்திணை, ஒரே சமயத்தில் சென்று பொருந்து, ஒருங்கு நேரிடு, இசை, ஒன்றுபடு, கழுத்தில் ஒத்திரு, இணங்கு.
Coincidence
n. தற்செயல் இணைவு, நிகழ்வுப்பொருத்தம், நிகழ்ச்சிகள் எதிர்பாராது ஒருங்கொத்து நிகழ்தல்.
Coincident
a. தற்செயலாக ஒருங்கு நிகழ்கிற, ஒத்தியல்கிற, ஒன்றுபடுகிற.
Coincidental
a. தற்செயல் நிகழ்வான, உடனிகழ்ச்சியான, தற்செயல் பொருத்தமான.
Coiner
n. நாணயமடிப்பவர், புதிதாக உண்டுபண்ணுபவர், கள்ள நாணயமடிப்பவர்.
Co-inheritance
n. ஒன்றோடொன்று பற்றியிருத்தல், உரிமை இணைவு.
Coinstantaneous
a. ஒரே கணத்தில் ஒருங்குநிகழ்கிற.
Co-insurance
n. கூட்டுவாழ்வுக்காப்பீடு.
Coir
n. (ம.) கயிறு செய்யப் பயன்படும் தென்னை நார்.
Coition
n. கலவி, மெய்யுறு புணர்ச்சி.
Cojolement
n. மருட்டி வசப்படுத்துதல், முகமனால் இசைவித்தல்.
Coke
n. சுட்ட நிலக்கரி, கல்கரி, எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி, (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
Cokkery
n. சமையற்கலை ஏடு, பாக நுல், சமையல் தொழில்முறை விளக்க நுல்.
Col
n. (மண்.) மலைத்தொடரிலுள்ள இடைப்பள்ளம்.
Cola
n. வெறியத்துக்கு மாற்று மருந்தாகவும் சுவைப்பொருளாகவும் உடல்வலிமை தரும் மருந்தாகவும் பயன்படும் கொட்டையை உடைய தென் ஆப்பிரிக்க மரவகை.
Colander
n. வடிகட்டி, அரிகலம், சிப்பல், குண்டுகள் உருக்கி வார்ப்பதற்கான சிப்பல் போன்ற வார்ப்பிரும்பு, (வி.) சிப்பலில் அரித்து வடிகட்டு.
Co-latitude
n. நிரப்பு நேர்வரை, நேர்வரை அளவுடன் சேர்ந்து ஹீ0 பாகையாகத்தக்க அளவுடைய நேர்வரை.
Colbertine
n. பின்னலாடை வகை.