English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cole-seed
n. எண்ணெய் விதைகளையுடைய செடி வகை.
Cole-slaw
n. கோசுக்கீரைக்கூட்டு.
Colic
n. கடு வயிற்றுவலி, அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு, (பெ.) பெருங்குடலின் உடற்பகுதி சார்ந்த.
Colicky
a. கடு வயிற்று வலிபோன்ற, கடுவயிற்றுவலி உண்டு பண்ணுகிற, வயிற்று வலியால் துன்பப்படுகிற.
Colitis
n. குடலழற்சி, பெருங்குடல் வீக்கம்.
Collaborate
v. உடனுழை, புத்தக முதலியவற்றை உடனிருந்து இயற்று, பகைவனோடு உடந்தையாயிருந்து வேலைசெய்.
Collaboration
n. உடனுழைப்பு.
Collaborator
n. உடனுழைப்பாளர்.
Collapsable
a. வேண்டும்போது மடக்கி அடக்கக்கூடிய.
Collapse
n. நொறுங்குதல், தகர்வு, முறிவு, தளர்ந்து வீழ்தல், மடங்கல், வீழ்ச்சி, (வி.) சுருங்கு, மூடு, முறிந்து உள்விழு, தகர்ந்துபோ, அழிந்துபோ, மனம் இடிந்துபோ.
Collar
n. கழுத்துப்பட்டை, சட்டையின் கழுத்துப்பகுதி, குதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார், வளையம், சுற்றுப்பட்டை, செடியின் தண்டும் வேரும் இணையும் இடம், (வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிடி, கழுத்துப்பட்டை அணிவி, உதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்து.
Collar-beam
n. சாய்வான இரண்டு உத்தரக்கைகளை இணைக்கும் விட்டம்.
Collar-bone
n. காறையெலும்பு, சவடியெலும்பு.
Collared
a. கழுத்துப்பட்டை அமையப்பெற்ற, கழுத்துப்பட்டைபோல வளைத்துக் கட்டப்பட்ட, கைப்பற்றப்பட்ட.
Collaret, collarette
n. சிறுகழுத்துப்பட்டைட, மகளிர் பூவேலையிட்ட கழுத்துப் பட்டை.
Collar-work
n. கடினமான மேட்டு ஏற்றம், மிகக் கடுமையான உழைப்பு.
Collate
v. அருகருகே வை, ஒருங்கு வை, நுணுக்கமாக ஒத்துப்பார், ஏட்டின் பக்க ஒழுங்கு ஆய்ந்து ஒப்பிட்டுப்பார், சீர்செய்து ஒழுங்காக அடுக்கு, கோவில் மானியமளி.
Collateral
n. ஒன்றுபட்ட கிளை மரபினர், அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர், ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது, இணையுறவினர், சமகாலத்தவர், சமகாலத்து, எதிராளி, சரிசமப்போட்டிக்குரியது, (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய, ஒத்திசைவான, பக்கத்துக்குப் பக்கமான, உடனொத்த, உடனிணைவான, உடனிகழ்ச்சியான, துணைமையான, துணையாதரவான.
Collation
n. ஒத்துப்பார்த்தல், சரிபார்த்தல், ஒப்பாய்வு, கோவில் மானிய நன்கொடை, ரோமன் கத்தோலிக்க நோன்பு நாட்களில் மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் எளிய சிற்றுண்டி, தனிப்பட்ட வேலைகளில் கொள்ளும் சிற்றுண்டி.
Colleague
n. உடன் கூட்டாளி, ஒரே தொழிலகத்தோழர், உடனுழைப்பாளர்.