English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cogitative
a. ஆழ்ந்த சிந்தனையுள்ள, நீடு ஆய்வுக்குரிய.
Cognac
n. பிரான்சு நாட்டு உயர் சாராய வகை.
Cognate
n. குருதி உறவுடையவர், ஒரே இனத்தவர், உறவினர், ஸ்காத்லாந்து சட்டத்தில் தாய்வழி உறவினர், (பெ.) ஒரே இனமான, ஒரே மரபு மூலத்தைச் சேர்ந்த.
Cognation
n. உறவுடைமை, குருதிக்கலப்பு, மொழியிடையே இன உறவு.
Cognition
n. அறிவு, அறிவுக்கூறு, அறியும் ஆற்றல், (உள.) புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு.
Cognitive
a. அறிவாற்றலுடைய, அறியும் ஆற்றலுடைய, புலனுணர்வுடைய.
Cognizable
a. புலனாலுணரக்கூடிய, அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய, அறிந்துகொள்ளக்கூடிய, நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட.
Cognizably
adv. அறிந்துகொள்ளக்கூடியதாக, புரியும்படி படியாக.
Cognizance
n. தெரிதல், காட்சியறிவெல்லை, கவனம், கவனிப்பு, கவனிப்பெல்லை, காட்சி, புலனுணர்வு, (கட்.) அறிகுறி, (சட்.) செயலாட்சி வரம்பு.
Cognizant
a. அறிவுடைய, எச்சரிப்புள்ள, தெரிந்திருக்கிற, விவரம் உணர்ந்துள்ள, கவனிப்புடைய, கவனம் செலுத்தியுள்ள, (மெய்.) அறிவாற்றல் இயங்குகிற, காட்சியறிவுடைய.
Cognize
v. அறி, தெரிந்துகொள், (மெய்.) அறிந்துணர், உணர்விற்கொள்ளு.
Cognomen
n. சாட்டுப்பெயர், அடைபெயர், பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர், பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர், சுட்டுப்பெயர்.
Cognominal
a. அடைபெயரைச் சார்ந்த, குடிப்பெயருக்குரிய, சிறப்புப்பெயர்பற்றிய, தன்னொத்த அதே பெயரையுடைய.
Cognominate
v. அடைபெயர் சூட்டு.
Cognoscente
n. (இத்.) நுண்ணிய அறிஞர், கலைப்பண்பாய்வாளர், நுகர்வுநய வல்லுநர்.
Cognoscible
a. அறியத்தக்க, தீர்ப்புக் கூறத்தக்க.
Cognovit
n. (ல.) (சட்.) எதிர்வாதி செலவுப் பொறுப்பிலிருந்து தான் விடுபடுவதற்காக வாதி வழக்கின் நேர்மையை ஏற்றல்.
Cohabit
v. கணவன் மனைவிபோன்று கூடி வாழ்.
Cohabitation
n. பிறரோடு கூடிவாழ்தல், கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல்.