English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Coffee-pot
n. காப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம்.
Coffee-room
n. உணவகச் சிற்றுண்டி அறை, அருந்தகப் பொது அறை.
Coffee-stall
n. சிற்றுண்டிச் சாவடி, சிற்றுண்டிக்குரிய பெட்டிக்கடை, இயங்கும் அருந்தகம்.
Coffer
n. பணப்பேழை, கருவூலப் பெட்டி, தள முகட்டின் உட்குழிவான கண்ணறை, (வி.) சேர்த்து வை, திரட்டி வை.
Coffer-dam
n. நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர்புகாக் கூண்டு அமைவு.
Coffered
a. பணப்பெட்டியுள் வைக்கப்பட்ட, உட்கண்ணறைகள் வாய்ந்த, சுரங்கத்தின் கசிவுக்காப்பூட்டப்பட்ட.
Coffin
n. பிணப்பெட்டி, இறந்தவர் உடலை வைத்தடக்கம்செய்ய வழங்கப்படும் பேழை, கடலுக்கொவ்வாக் கப்பல், குதிரைக்குளம்யின் பகுதி, (வி.) சவப்பெட்டியில் வை.
Coffin-bone
n. குதிரைக்குளம்படுத்த எலும்பு.
Coffin-joint
n. குதிரைக்குளம்படுத்த கணுப்பொருத்து.
Coffin-plate
n. பிணப்பெட்டிமீது பதிக்கப்படும் இறந்தவர் பெயர் பொறிக்கப்பட்ட தகடு.
Coffin-ship
n. கடலில் ஆரிடர் தரத்தக்க அளவில் பழுதான மரக்கலம்.
Coffle
n. அடிமைக்குழு, பயணக்குழுவில் கட்டியிணைக்கப்பட்டுச் செல்லும் அடிமைகள் விலங்குகளின் தொகுதி.
Cog
-1 n. இயக்கவிசை படர்விக்கும் இயந்திரச் சக்கரத்தின் பல், இயக்கவிசை இணைக்கும் இயந்திரத்தின் முனைப்பான பகுதிகள், இயந்திரப்பகுதியின் கொளுவி, (வி.) சக்கரத்தில் பற்கள் அமை, பற்களுக்குமுன் தடை வைத்துச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்து.
Cog
-2 n. போர்க்கப்பல், சிறுபடகு, வள்ளம், பரிசல், கப்பலின் சிறு படகு.
Cog
-3 n. ஏமாற்றுதல், மோசடி, (வி.) ஏமாற்று, மோசடி செய், வஞ்சனை செய், கெஞ்சிக் காரியன்ற்று, இச்சகம் பாடி இணக்குவி, சூதாட்டத்தில் சூழ்ச்சியால் பகடையை விரும்பியபடி விழச்செய்.
Cogence, cogency
நம்பவைக்கும் திறம், ஒத்துக் கொள்ள வைக்கும் ஆற்றல்.
Cogent
a. நம்பவைக்கும் ஆற்றலுடைய, நம்பத்தக்க.
Coggle
n. மணியாசுக்கல், பாவுவதற்கு வழங்கப்படும் உருளைக்கல், (வி.) நிலையற்றிரு, உறுதியின்றிரு.
Cogitate
v. நினைந்தது நினை, மனனம் செய், ஆழ்ந்து நினை, நினைந்தாராய், உளத்தில் வகு, (மெய்.) கருத்துரு வாக்கு, கருது.
Cogitation
n. ஆழ்ந்த சிந்தனை, கருத்தாய்வு.