English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Comfort
n. ஆறுதல், தேறுதல், ஊக்குதவி, ஓய்வமைதி, இன்பநலம், வாய்ப்புநலம், துணைவர், துணை தருவது, இன்பமளிப்பது, ஆறுதலளிப்பது, அன்னவகையின் தூவிகளாலான திண்டு, (வி.) துயராற்று, நோவு தணி, ஆறுதலளி, தளர்வகற்று, ஓய்வமைதி வழங்கு, இன்ப வாய்ப்பு நல்கு, மகிழ்ச்சியூட்டு.
Comfortable
a. ஆறுதலளிக்கக்கூடிய, மகிழ்ச்சி வாய்ந்த, அமைதியான.
Comforter
n. ஆறுதலளிப்பவர், அமைதி நல்குபவர், தேற்றரவாளர், நீண்ட ஒடுக்கமான கம்பளிக் கழுத்துக் குட்டை, பொய்ப் பாற்காம்பு.
Comic
n. நகுமியல்பு, நகுதிறம், நகைச்சுவை நடிகர், விகல்ன், நகைச்சுவைப் பத்திரிக்கை, (பெ.) இன்பியல் நாடகம் சார்ந்த, நகைப்பூட்டுகிற, வேடிக்கையான.
Comical
a. நகைப்புக்கிடமான, கோமாளித்தனமான, விசித்திரமான.
Cominform
n. 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகப் பொதுவுடைமை மைய நிலையம்.
Comintern
n. அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு, 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Comique
n. நகைச்சுவை நடிகர் அல்லது பாடகர்.
ComitadjI
n. பல்கேரிய நாட்டுப் புரட்சிக் குழுவின் உறுப்பினர், பல்கேரிய கொள்ளைக்காரர்.
Comitatus
n. அரசிளங்குமரனின் வழித்துணை, மெய்க்காவலன், மாவட்டம், கோட்டம்.
Comitia
n. pl. குற்ற நடுவர்களைத் தேர்ந்தெடுப்பது-சட்டங்களை நிறைவேற்றுவது முதலியவற்றைச் செய்யும் ரோம நாட்டுப் பேரவைகள்.
Comity
n. மட்டுமதிப்பு, மரியாதை, பண்பமைதி, பழக்கவழக்க ஒழுங்கமைவு.
Comma
n. காற்புள்ளி, கால்மாத்திரை நிறுத்தக்குறி, மிகச் சிறு இடைவௌத, சிறு நிறுத்தம், சிறிய இடைத்தொடர்பு முறிவு, (இசை.) நுணுக்க இடையீடு.
Command
n. ஆணை, அதிகாரம், ஆதிக்கம், கட்டுப்பாடு, கட்டளை, கட்டளை இடப்பட்ட செய்தி, (வி.) ஆணையிடு, அதிகாரம் செலுத்து, செயற்படும்படி செய், ஆட்சி செலுத்து.
Commandant
n. படைத்தலைவன்.
Commandeer
v. இராணுவ சேவைக்குக் கட்டாயப்படுத்து அல்லது இராணுவ பணிக்குக் கைப்பற்று, படைத்துறைக்காகக் கைப்பற்று.
Commander
n. படைத்தலைவர், ஆணை அதிகாரி, கப்பற் படையில் மாலுமிக்கு அடுத்த அதிகாரி, மேலாள், வீரத்திருவுடையவர்.
Commander-in-Chief,
முதற்பெரும் படைத் தலைவர்.
Commandery
n. ஆணை அதிகாரியின் மாவட்டம்.