English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Commentation
n. சந்தர்ப்பம் கூறி விளக்கல், இடம் காலம் கூறி விளக்குதல்.
Commentator
n. கருத்துரையாளர், உரையாசிரியர், மதிப்புரைஞர், விளக்கவுரையாளர், நடப்பு நிகழ்ச்சியின் விளக்கவுரை ஒலிபரப்பாளர்.
Commentatorial
a. விளக்கவுரை சார்ந்த, விரிவுரை பற்றிய.
Commerce
n. பெரு வாணிகம், வாணிகத் தொடர்பு, விரிவான கொடுக்கல் வாங்கல் தொடர்பு, போக்கு வரவுத் தொடர்பு, செயல் தொடர்பு, தோழமைத் தொடர்பு, (வி.) வாணிகம் செய், தொடர்புகொள்.
Commercial
n. வாணிகப் போக்குவரவாளர், பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள், வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல், வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி, (பெ.) வாணிகத் தொடர்புடைய, வாணிகஞ் சார்ந்த.
Commercialism
n. வாணிகப்பண்பு, வாணிக மனப்பான்மை, வாணிகத்துறை மொழிவழக்கு.
Commercialize
v. வாணிகத்துறையாக்கு, வாணிகப்பண்பூட்டு, வாணிகச் சார்பாக்கு.
Commere, n. compere
என்பதன் பெண்பால் வடிவம்.
Commination
n. அச்சுறுத்தல், பழிப்பு, கண்டனம், ஆங்கில நாட்டுரிமைத் திருக்கோயிலில் சிறப்பு நாட்களில் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் இறைவனின் அச்சுறுத்தல் தொகுதி.
Comminative, comminatory
a. தண்டனைப்பற்றி அச்சுறுத்துகிற.
Commingle
v. ஒருங்கு கல, இடைவிரவு, ஒன்றாகச் சேர்.
Comminute
v. நுண்துகள்களாகச் செய், பொடியாக்கு, நில உடைமைகளை மிகச்சிறு துண்டுகளாகப் பிரி.
Commiphora
n. பிசின் வகை தரும் ஆசிய-ஆப்பிரிக்க மரவகை.
Commiserable
a. இரக்க உணர்ச்சிக்குரிய, இரக்கப்படத்தக்க.
Commiserate
v. பரிவுகொள், இரக்கம் காட்டு, வருத்தம் தெரிவி.
Commiseration
n. பரிவிரக்கம்.
Commiserative
a. இரக்க உணர்வு செறிந்த, வருத்தம் தெரிவிக்கிற.
Commissar
n. பொறுப்பாளர், சோவியத் ருசியா ஒன்றியத்தின் அரசியற் பணியரங்கப் பொறுப்புடைய அமைச்சர்.
Commissarial
a. பொறுப்பாளர்க்குரிய, படைத்துறை உணவுப்பொருள் மேலாளைச் சார்ந்த.
Commissariat
n. படைத்துறை உணவுத்துறை அரங்கம், சோவியத் ருசியாவின் அரசியற் பணியரங்கத் துறை, உணவுத்துறை அரங்கப் பணிமனை, பொறுப்பாளர் குழு, ருசிய அமைச்சர் குழு.