English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Commissary
n. பொறுப்பாளர், ஆட்பேர், தனிமன்ற நடுவர், உயர்நிலைக் காவல்துறைப் பணிமுதல்வர், சமய வட்டத் தலைவரின் தனிப்பேராள், படைத்துறை உணவுவள ஆதாரப் பணியரங்கத்தலைவர்.
Commission
n. செயல்துறைப்படுத்திவிடல், செய்துவிடல், செய்தல், செயல், ஒப்படைத்துவிடல், பொறுப்பளிப்பு, அனுப்பிவைத்தல், செயல் தீர்வு, செயலுரிமையளிப்பு, உரிமைக்கட்டளை, ஆணைப்பத்திரம், தனிப்பொறுப்பு, பொறுப்பான பணி, பொறுப்பாண்மைக் குழு, விற்பனை முகவர் பங்கு வரி, தரகு, வாணிகக் கட்டளை, வேண்டுதலறிவிப்பு, போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை, பொறுப்புரிமை, பணி ஆணை, இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல், (வி.) பொறுப்பளி, அதிகாரம் கொடு, அமர்த்து, ஒப்படை, செயற்படுத்து, செயற்படச் செய்.
Commission-agent
n. தரகு வணிகர், தரகுக்காக வாணிகம் செய்பவர்.
Commissionaire
n. பணிமுறைத் தூதர், வாயிற்காப்போன், வாயிற்காப்போராகப் பணியாற்றும் வயது முதிர்ந்த கடல் நிலப் படைவீரர்.
Commissioned
a. பொறுப்புரிமை அளிக்கப்பட்ட, தனிக் கட்டளையமர்வு பெற்ற, செயல் நிலைப்படுத்தப்பட்ட.
Commissioner
n. ஆணையர், தனிக் கட்டளைமூலம் பணி ஏற்றவர், பொறுப்பாண்மைக் குழு உறுப்பினர், பிரதிநிதி, பேராள்.
Commissure
n. இணைப்பு, சந்திப்பின் மேற்பரப்பு, தையல் வாய் விளிம்பு, இருநரம்பு மையங்களை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி.
Commit
v. பொறுப்பு ஒப்படை, ஓம்படையாக ஒப்புவி, சேர்ப்பி, குற்றவாளியாகு, குற்றம் செய், குற்றத்துக்கு உட்படுத்து, சிக்கவை, உறுதிசெய்.
Commitment
n. ஒப்படைப்பு, சேர்ப்பித்தல், சிறைக்குக் குற்றவாளியை அனுப்பும் ஆணை, சிறையில் அடைத்தல், மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு, ஈடுபாடு பற்றிய கடப்பாட்டுநிலை.
Committal
n. ஒப்படைப்பு, வாக்குறுதி, நேரடியாக அல்லது குறிப்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிப் பொறுப்பு.
Committee
n. குழு, வாரியம், பெருங்குழுவிலிருந்து சிறப்பான பணிக்காக அமைக்கப்பட்ட சிறுகுழு, (சட்.) பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர், பைத்தியக்காரனின் பொறுப்பை ஏற்பவர்.
Commix
v. கல, ஒருமிக்க கல.
Commixtion, commixture
n. ஒருங்கு கலத்தல், கலக்கும் நிலை, கலவை, கூட்டு, உடலும் ஆவியும் இணைந்த திருமீட்டெழுச்சியின் அடையாளமாகத் திருவுணா அப்பச் சில்லைத் திருக்கலத்திலிடும் கிறித்தவ சமயத் திருவினை.
Commode
n. பக்கச் சுவரில் பதித்துள்ள சிறுபலகை, பக்கப்பலகை, கோக்காலி, இழுப்பறைப் பெட்டி, படுக்கை அறைக் கழிவுக் கலம், பழங்காலச் சீமாட்டிகளின் உயர்தொப்பி.
Commodious
a. இடமகன்ற, இடவாய்ப்பு மிக்க, இன்ப நலவாய்ப்புடைய, தகுதியான, பொருத்தமான.
Commodiousness
n. இடவசதி, போதிய இட அகற்சி.
Commodity
n. பயனுடைய பொருள், சரக்கு, விளைபொருள்.
Commodore
n. கடற்படைப் பணிமுதல்வர், வாணிகக் கப்பற்படையின் முதல்நிலை மீகாமன், பந்தயப் படகுச் சங்கத்தலைவர், கடற்படைப் பணிமுதல்வரின் கப்பல்.
Common
n. பொதுநிலம், பொது வௌத, (பெ.) பொதுப்படையான, எல்லோருக்குமுரிய, வழக்கமான, அடிக்கடி நிகழ்கிற, பொதுமுறையான, வழக்கமாக நிகழ்கிற, எளிதாகக் கிடைக்கிற, குறைமதிப்புள்ள, நாகரிகமில்லாத, கீழ்த்தரமான, (கண.) பொதுவான, ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய.
Commonable
a. பொதுவுரிமையாகக் கொள்ளப்பட்ட.