English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Communicative
a. அறிவிக்கும் இயல்புடைய, செய்தி தெரிவிக்கும் குணமுள்ள, தாராளமாகப் பழகுகிற.
Communicatory
a. அறிவு கொடுக்கிற, அறிவூட்டுகிற.
Communion
n. கூடிக்கலந்து பேசுதல், சிந்தனை செய்தல், ஆன்மிகக் கூட்டுறவு, தோழமை, பொது உரிமை, சமய வழிபாட்டு ஒற்றுமை, சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு, இயேசுநாதரின் இறுதி விருந்து.
Communionist
n. தூய நற்கருணையிற் பங்கு கொள்பவர்.
Communique
n. (பிர.) பணித்துறை அறிவிப்பு.
Communism
n. பொதுவுடைமைக் கொள்கை, பொதுவுடைமை, பொதுவுடைமை இயக்கம், பொதுவுடைமைக் கட்சி, தொழிலாளர் இன சர்வாதிகாரத்தின் தேவை வலியுறுத்தும் கட்சி.
Communist
n. பொதுவுடைமைக் கொள்கையர்.
Communitarian
n. சமுதாய உறுப்பினர்.
Community
n. பொதுச் சொத்துரிமை, உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை, பொதுச் சொத்துரிமைக் குழு, சமுதாயம், பொது உரிமைநலக் குழுமம், பொது குடிவாழ்வுக் குழுமம், பொது அரசியல் அமைப்புக் குழுமம், நகரவை மக்கட் பொதுக் குழுமம், சமயக்கூட்டுக் குழு, பொதுவழிபாட்டுக் குழுமம், தொழிற்கூட்டுக்குழு, பொதுமக்கள் குழு, தனிமுறைக் கூட்டுக் குழு, ஒத்த பொதுப் பண்பு, ஒத்த குழுநலம், தோழமை, பொது உடன்பாடு.
Communize
v. பொதுவுடைமையாக்கு, பொதுவுடைமையராக்கு.
Commutable
a. மாற்றீடு செய்யக்கூடிய, இனமாற்றுச் செய்யக்கூடிய, பொருளைக் கொடுத்துச் சமரசமாகத் தீர்க்கக் கூடிய.
Commutate
v. மின் ஓட்ட வகையை மாற்று.
Commutation
n. இன மாற்றுதல், தண்டனையைக் குறைத்து மாற்றல், பண ஈடுசெய்து மாற்றுதல்.
Commutative
a. இனமாற்றத்துக்குரிய, பரிமாற்றம் செய்யக்கூடிய.
Commutator
n. மின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி, இனமாற்றம் செய்பவர்.
Commute
v. மாற்றிப்பெறு, கொடுத்துவாங்கு, கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று, தண்டனையைக் குறை, ஒன்றுக்கொன்றாக இனமாற்று, பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய், கடமை மாற்றீடு செய், இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை.
Comose, comous.
மரவகையில் உச்சியில் தழையுடைய, விதைகளில் நுனியில் இழைக்கொத்துடைய.
Compact
-1 n. நெருக்கமான பொருள், கச்சிதமான பொருள் அல்லது கட்டிடம், கூட்டு, இணைப்பு, சுண்ணச் சிமிழ், கைப்பையில் கொண்டுசெல்லக்கூடிய சிறு முக ஒப்பனைச் சுண்ணப்பெட்டி.
Compact
-2 a. நெருக்கமாக வைக்கப்பட்ட, நெருக்கமாக இணைக்கப்பட்ட, அமைக்கப்பட்ட, இயற்றப்பட்ட, உறுதியான, வன்மையான, நெருக்கமான, சுருக்கமான, (வி.) இணைப்பாகச் சேர்த்து அழுத்து, திடமாக்கு, வலுப்படுத்து, இணைந்து ஆக்கு.
Compact
-3 n. உடன்படிக்கை, ஒப்பந்தம், கட்டுப்பாடு, கூட்டுக்குழு.