English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Compages
n. சட்டம், கட்டிடம், சிக்கல் வாய்ந்த அடி அமைப்பு.
Compaginate
v. இணை, சேர், பொருத்து.
Compaionable
a. தோழனாய் இருக்கத்தக்க, மனத்திற்கொத்த, இசைவான.
Compaionate
a. தோழமையில் பங்குகொள்கிற.
Compaioned
a. தோழன் உள்ள, நண்பன் உடைய.
Companion
-1 n. தோழன், உடனிருப்பவன், நண்பன், கூட்டாளி, உயர்நிலைப்பணியாள், ஆள், பயனற்றவன், ஓர் அமைப்பின் உறுப்பினர், சோடியில் ஒன்று, (பெ.) கூடச் செல்கின்ற, தோழன் தன்மையான, (வி.) சேர்ந்து செல், உடனியங்கு.
Companion
-2 n. (கப்.) மேல் தளத்தினின்று கீழ்த்தளத்திற்கு வௌதச்சம் அனுப்பும் சாளரச்சட்டம், பலகணிக் கிராதி, கீழ்த்தளத்திற்கு வர உதவும் ஏணி.
Companion-hatch
n. (கப்.) தளத்தில் உள்ள துளையின் அல்லது திறப்பின் மூடி, மரமூடி.
Companion-hatchway
n. (கப்.) தளத்தினின்று அறைக்குச் செல்லும் வழி.
Companion-ladder
n. (கப்.) மேல் தளத்தினின்று அறைக்குச் செல்லும் படிக்கட்டு, ஏணி.
Companionship
n. தோழமை, தோழன் நிலை, கூட்டுக் குழு நண்பர் குழாம்.
Company
n. மக்கள் கூட்டம், சங்கம், கழகம், பறவை அல்லது விலங்குத் தொகுதி, வாணிகச் சங்கம், சமூகம், படைப்பிரிவு, கப்பலோட்டிகள் தொகுப்பு, தோழமை நிலை, சமூகக் கூட்டுறவு, தொடர்பு, (வி.) கூடிச்செல், தொடர்பு கொள், கூட்டுச்சேர், கூடிவாழ்.
Company
குழுமம், வணிக நிறுவனம்
Comparable
a. ஒப்பிடக்கூடிய.
Comparative
n. உறழ்படி, (பெ.) ஒப்புமை செய்கிற, ஒப்பீடு சார்ந்த, பிறவற்றோடு ஒத்துப்பார்த்து உயர்வாகப் போற்றப்பட்ட, நேர் நிலையில்லாத, முழுமையற்ற, (இலக்.) அதிகத்தை அறிவிக்கிற, உறழபடியான.
Compare
n. ஒப்பீடு, (வி.) ஒத்துப்பார், ஒப்பிடு, ஒரே மாதிரியானதென்று தெரிவி, ஒத்ததென விவரித்துரை, (இலக்.) ஒப்புப்படிகளைத் தா, ஒப்பீடு செய், ஒப்புமை காட்டு, ஒப்பாக நில், போட்டி இடு, போராடு.
Comparison
n. ஒப்புமை காண்டல், ஒப்பீடு செய்தல், ஒப்புக் காணும் அளவு, ஒப்பீடான மதிப்பீடு, ஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடு, இருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமை, உவமை அணி, உருவகம், (இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல்.
Compart
v. தனி அறைகளாகப் பிரி, தனிப் பிரிவுகளாக்கு, பல தடுப்புக்களாகப் பிரி.
Compartment
n. தடுத்த தனி இடம், அறை, பிரிவு, புகைவண்டிப் பெட்டி, ஏதாவதொன்றின் பிரிவு.