English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Complaisance
n. இன்முகமுடைமை, மகிழ்வூட்டும் பண்பு, துணைமை நயம், விட்டுக் கொடுப்பு மனப்பான்மை.
Complaisant
a. அன்பாதரவான, மகிழ்வூட்டும் விருப்புள்ள, எளிமைத் திறமுள்ள, மன்னிக்கும் பாங்குடைய.
Complect
v. தழுவு, இணைத்துப்பின்னு.
Complement
-1 n. நிரப்புக் கூறு, முழுமையாக்குவது, குறைநிரப்புப் பொருள், இணைநிறைவுப்பொருள், இணைவள நிறைவு, (வடி.) செங்கோண நிரப்புக்கூறு, நிரப்புக்கோணம், செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு, (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல், (இசை.) சு
Complement
-2 v. நிரப்புக்கூறாயமை, குறைநிரப்பு.
Complemental
a. முழுமையாக்குகிற, நிரப்புகிற.
Complementary
a. முழுமையாக்குகிற, இணைந்து முழுமையாகவல்ல, இணைந்து செங்கோணமாக்கவல்ல, இணைந்து வெண்ணிறமாகவல்ல, இணைந்து மடக்கையைப் பத்தாக்க வல்ல, இணைந்து இசையிடையீட்டை ஒருபாலையாக்கவல்ல.
Complete
a. குறைபாடற்ற, முழுநிறைவுடைய, முழுமையான, முடிந்த, நிறைவான, முழுமையும் ஆயத்தமான, நிறைவு செய்யப்பட்ட, நிறைவான, (வி.) முடி, முழுமையாக்கு, நிறைவேற்று.
Completion
n. நிறைவு செய்தல், நிறைவு, முழுமையான நிலை.
Completive, completory
a. முழுமையாக்குகிற, நிறைவேற்றுகிற.
Complex
-1 n. சிக்கல் வாய்ந்த முழுமை, பல்திறக்கூட்டொருமை, (உள.) செறிதேக்க உணர்ச்சித் தொகுதி, அடக்கி உணர்வாழத்தின் மறதியில் செறிவிக்கப்பெற்றுக் குமுறும் உணர்ச்சித்தொகுதி, உள்ளுணர்ச்சிச் சிக்கல் நிலை, (பெ.) பல்கூட்டான, பல்கூட்டுத் தொகுதியான, எளிதற்ற, உட்சிக்கல் வாய
Complex
-2 v. சிக்கலாக்கு, கடினமாக்கு.
Complexional
a. மேனி நிறஞ்சார்ந்த, இயல்நிறம்பற்றிய, முகத்தோற்றத்துக்குரிய.
Complexioned
a. நிறம்கொண்ட, தோற்றம் உடைய, பண்புள்ள.
Complexionless
a. தனிநிறமற்ற, வௌதறிய.
Complexity
n. உட்சிக்கல் நிலை, கடுஞ்சிக்கல்.
Compliance, compliancy
n. கீழ்ப்படிதல், இணக்கம், உடன்பாடு, பணிவிணக்கப் பண்பு.